அந்த நடிகரோட டான்ஸ் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

Actress Bhagyashri Borse: இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் பாக்யஸ்ரீ போர்ஸ் தனக்கு பிரபல நடிகரின் டான்ஸ் ஸ்டைல் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த நடிகரோட டான்ஸ் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

Published: 

19 Nov 2025 16:04 PM

 IST

இந்தி சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான யாரியன் 2 என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Actress Bhagyashri Borse). அதனைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான மிஸ்டர் பட்சன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கி இருந்த நிலையில் நடிகர் ரவி தேஜா நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக தான் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து இருந்தார். மேலும் ரொமாண்டிக் க்ரைம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது சிறப்பான நட்டிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான சைமா விருதை வென்றார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்.

மிஸ்டர் பட்சன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து கிங்டம் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இளம் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் வெளியான காந்தா என்ற படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

காந்தா நாயகி பாக்யஸ்ரீ போர்ஸுக்கு பிடித்த விஜயின் டான்ஸ் ஸ்டைல்:

இந்த காந்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் சாரின் நடன பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். திரையில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஒரு தனித்துவமான வசீகரம் இருக்கிறது, ஒவ்வொரு அடியிலும் அவரது ஒளி காந்தமானது. அவரது திரை இருப்பு எனக்கு எப்போதும் பிடிக்கும் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read… பராசக்தி படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் நடிகை ஸ்ரீ லீலா – வைரலாகும் வீடியோ

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… காமெடி – செண்டிமெண்ட் பாணியில் தமிழில் வெப் சீரிஸ் பார்க்கனுமா? அப்போ இந்த ஸ்வீட் காரம் காஃபி வெப் சீரிஸை மிஸ் செய்யாதீர்கள்

சுவிட்சர்லாந்துக்கு இணையான இந்தியாவின் குளிர்பிரதேசம்... டிராஸ் பற்றி தெரியுமா?
இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவிருக்கும் போட்டிகள் - முழு விவரம் இதோ
மும்பையில் தீவிரவாத தாக்குதல்? வெளியான அதிர்ச்சி தகவல்
வட இந்தியாவில் கடும் குளிர்... தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை - முழுமையான வானிலை நிலவரம் இதோ