வாரணாசி படத்தில் அந்த கதாப்பாத்திரம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்

Actor Tovino Thomas Talks About Varanasi Movie: மலையாள சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் பள்ளிச்சட்டம்பி என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவரது பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாரணாசி படத்தில் அந்த கதாப்பாத்திரம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் - நடிகர் டொவினோ தாமஸ்

டொவினோ தாமஸ்

Published: 

17 Apr 2026 16:33 PM

 IST

மலையாள சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடிகராக நடித்து வருகிறார் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தாலும் அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகனாக நடித்து வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டின் முதல் படமாக பள்ளிச்சட்டம்பி படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் கடந்த 15-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு விஷு பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்தப் படம் தற்போது மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் டொவினோ தாமஸ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் வாரணாசி படம் குறித்தும் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாரணாசியில் அந்த கதாப்பாத்திரம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன்:

அதன்படி வாரணாசி படத்தில் நடிப்பது குறித்து நடிகர் டொவினோ தாமஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடித்து வரும் படம் வாரணாசி. இந்தப் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்க சொன்னால் நிச்சயமாக நடிப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த விசயம் நடந்தால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் வீடியோ

இணையத்தில் வைரலாகும் டொவினோ தாமஸின் பேச்சு:

Also Read… Pallichattambi: டோவினோ தாமஸ் – கயாடு லோஹரின் ‘பள்ளிச்சட்டம்பி’ பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Follow Us
பாடகி கேஎஸ் சித்ரா தனது மகளை பற்றி பகிர்ந்த பதிவு.. உடன் அன்பை பகிர்ந்த பாடகர்கள்..
கிணற்றுக்குள் விழுந்த சிங்கம் - 30 நிமிடங்களில் வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்பு
பெட்ரோலுக்கு ரூ.18 இழப்பு, டீசலுக்கு ரூ. 35 இழப்பு - நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈரானுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களையும் நிறுத்தம் - அமெரிக்கா கடும் நடவடிக்கை