இரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம் – நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!

Mandaadi Movie Shooting Spot Video: நடிகர் சூரி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

இரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம் - நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!

சூரி

Published: 

03 Feb 2026 20:16 PM

 IST

தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய நடிகர் சூரி தனது கடின உழைப்பின் காரணமாக சினிமாவில் காமெடி நடிகராக முன்னேறினார். தொடர்ந்து தனது இயல்பான நடிப்பின் மூலமாகவும் டைமிங் காமெடியின் காரணமாகவும் மக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன்படி நடிகர் சூரி காமெடியனாக நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலருடன் இணைந்து நடிகர் சூரி காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காம்போவில் வெளியான படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தது. அதன்படி நடிகர் சூரி காமெடியனாகவே நடித்து வந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கருடன், விடுதலை பாகம் 2 மற்றும் மாமன் ஆகியப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சீரியசான கதைகளில் நாயகனாக நடித்து வந்ததால் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மாமன் படத்தில் நடித்தார். இந்தப் படம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மண்டாட்டி படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட சூரி:

இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது மீனவனாக நடித்து வரும் படம் மண்டாட்டி. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் மண்டாட்டி படப்பிடிப்பு தளத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்தும் வீடியோவை நடிகர் சூரி வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் இரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம் இது என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஓடிடியில் வெளியான பிறகும் வசூலில் கலக்கும் நிவின் பாலியின் சர்வம் மாயா படம்

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sai Pallavi: எனது பியூட்டி சீக்ரெட் இதுதான்.. நடிகை சாய் பல்லவி சொன்ன ரகசியம்!

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..