நிவின் பாலியின் பிரதிச்சாயா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட மோகன்லால்
Prathichaya Movie Trailer | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

பிரதிச்சாயா
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் சர்வம் மாயா என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் வசூலில் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். ஓடிடியில் வெளியான பிறகு அதிக அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பேபி கேர்ள். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படமும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் சர்வம் மாயா படத்தின் மாபெரும் வெற்றியால் இந்தப் படத்தின் வருகை மற்ற மொழி ரசிகர்களிடையே கவனத்தைப் பெறவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.
பிரதிச்சாயா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட மோகன்லால்:
கடந்த 2025-ம் ஆண்டில் நிவின் பாலி நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் இந்த 2026-ம் ஆண்டில் படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அந்த வகையில் முன்னதாக பேபி கேர்ள் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக பிரதிச்சாயா படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் உன்னிகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் ஷர்ஃப் யு தீன் மற்றும் பாலச்சந்திர மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் படத்தை ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ட்ரெய்லரை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார்.
Also Read… யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Prathichhaya title and trailer launch by Lalettan… ❤️❤️@Mohanlal @antonypbvr @GokulamGopalan
Written & Directed by #UnnikrishnanB
Produced by @GokulamMovies & #RDIlluminationsLLP#TrailerOutNow #SreeGokulamMovies pic.twitter.com/2beooiX917
— Nivin Pauly (@NivinOfficial) February 18, 2026
Also Read… சிம்புவின் அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை சைத்ரா ஆச்சர்