ரிலீஸ் தேதியை லாக் செய்தது சட்டென்று மாறுது வானிலை படம்
Sattendru Maarudhu Vaanilai Movie Release Update: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

சட்டென்று மாறுது வானிலை
தமிழ் சினிமாவில் தொடர்ந்துர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்துர் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இளைஞர்களை கவரும் வகையில் மிகவும் ஜாலியான படங்களில் நடித்து வரும் நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. அதன்படி நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. ரொமாண்டிக் த்ரில்லர் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாபு விஜய் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மீனாட்சி கோவிந்த ராஜன் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டென்று மாறுது வானிலை படத்தின் ரிலீஸ் தேதி:
அதன்படி முன்னதாக ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் படம் எபோது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ஜெய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் வருகின்ற 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கோலிவுட் முதல் பாலிவுட் வரை… நாளை என்னென்ன படம் ரிலீஸ் ஆகுது தெரியுமா?
நடிகர் ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#SattendruMaarudhuVaanilai All set for grand release on MAY 15TH , This Poster is 🔥🔥
Trailer ▶️ https://t.co/LMXFXSacF9#SMVFromMay15th
Written & Directed by @BabuVijayB 🎥@Actor_Jai @iYogiBabu @BVFrames @Richardmnathan @ggirishh @MeenakshiGovin2 @ActorSriman… pic.twitter.com/FF9Lcl3CZE
— Jai (@Actor_Jai) May 8, 2026
Also Read… விஜய் சாருக்காக ஒரு கதை எழுதியிருந்தேன்.. ஆனால் – அபிஷன் ஜீவிந்த் ஓபன் டாக்!