Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush: தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?

Dhanush New Movie Update : நடிகர் தனுஷ் இயக்கத்திலும் நடிப்பிலும் தமிழில் இறுதியாக வெளியான படம் ராயன். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு, இந்தி எனப் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து நியூ அப்டேட் வெளியாகியுள்ளது.

Dhanush: தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?
தனுஷ்
barath-murugan
Barath Murugan | Published: 09 May 2025 19:35 PM

பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). தமிழ் சினிமாவின் ஹிட் நடிகரான இவர் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (Nilavuku en mel ennadi kobam) . இந்த படத்தை தனுஷ் புது முக நடிகர்களை வைத்து இயக்கியிருந்தார். இந்த படமானது மார்டன் காதலை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படமானது எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளிலும் படங்களில் கமிட்டாகி வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இட்லி கடை (Idly Kadai)  படமானது ரிலீசிற்கு தயாராகிவருகிறது. இந்த படத்தை தனுஷ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் டி 55, டி 56 மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜுடன் (Vignesh Raj)  ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அதில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ்  (Vels Films International) நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு இளம் நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் தீவிரமாக நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த அப்டேட்டுகள் வெளியாகி இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது.

மமிதா பைஜூவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Mamitha Baiju (@mamitha_baiju)

நடிகர் தனுஷின் நடிப்பில் மட்டும் தமிழில் வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்கள் காத்திருக்கிறது. நடிகர் தனுஷின் இயக்கத்திலும், அவரின் முன்னணி நடிப்பிலும் உருவாகியுள்ள படம் இட்லி கடை. இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டிலே வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து இந்த இடத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு முன் வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் தெலுங்கில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்க, முன்னணி நடிகையாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இந்தியில் தற்போது தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்துதான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமானஅறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்...
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி...
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்...
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்...
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு......
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...