நோ ஓடிடி… நேரடியாக யூடியூபில் வெளியாகும் அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படம்
Sitaare Zameen Par Movie: பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் சித்தாரே ஜமீன் பர். இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சித்தாரே ஜமீன் பர்
பாலிவுட் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அமீர் கான் (Actor Ameer Khan). இவரது நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சித்தாரே ஜமீர் பர். இந்தப் படத்தில் நடிகர் அமீர் கான் உடன் இணைந்து நடிகர்கள் ஜெனிலியா டிசோசா, அருஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பென்ட்சே, சம்வித் தேசாய், சிம்ரன் மங்கேஷ்கர், ஆயுஷ் பன்சாலி, டோலி அலுவாலியா, குர்பால் சிங், பிரிஜேந்திர கலா, தீப்ராஜ் ராணா, ஜக்பீர் ரதி, ஷாம் மஷல்கர், கரீம் ஹாஜி, தாரண ராஜா, அங்கிதா சாஹிகல் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
ஸ்போர்ஸ் ட்ராமாவாக உருவாகி இருந்த இந்தப் படத்தின் திரைக்கதையை திவி நிதி சர்மா எழுத இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தை அமிர் கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் அமீர் கான் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு ஸ்பானிஸ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் தான் இந்த சித்தாரே ஜமீர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படத்தின் கதை என்ன?
கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கும் நடிகர் அமீர் கான் மது போதையில் வாகனத்தை ஓட்டியதால் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பார்கள். அந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் செல்லும் அமீர் கான் கூடைப் பந்து பயிற்சியாளர் என்பதை தெரிந்த நீதிபதி அவருக்கு ஒரு வேலை கொடுப்பார். அது என்ன என்றால் மன வளர்ச்சி குன்றிய நபர்களுக்கு 3 மாதம் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பார்.
முதலில் அவர்களின் பேச்சு புரியவே அமீர் கானுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கூடைப்பந்து விளையாட்டை சொல்லிக்கொடுத்து அவர்களை தொடர்ந்து போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார். இப்படி அவர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் போது அவர்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள் இல்லை நார்மல் மனிதர்கள் என்று நினைக்கும் நம்மிடம் தான் நிறைய குறைகள் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வார்.
Also Read… தளபதி விஜய் இல்லாமல் எல்சியு முழுமையடையாது… ஆனால் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து அவர்களை பயிற்சி அளிக்கும் அமீர் கான் அவர்களுடன் இருந்து இருந்து இவரின் குணமும் கொஞ்சம் கொஞ்சமாம மாறி வேறு மனிதராக இருப்பார். காமெடி, செண்டிமெண்ட் என்று படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து படம் தற்போது ஓடிடியில் வெளியாகாமல் நேரடியாக யூடியூபில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இணையத்தில் கவனம் பெறும் அமீர் கானின் பேச்சு:
Aamir Khan’s “big announcement” just fizzled out.
What was promised as a game-changing distribution revolution now feels more like a quiet compromise.
Before his latest film’s #SitaareZameenPar release, Aamir boldly declared:
“My film won’t be available anywhere for six months… pic.twitter.com/zfxeCRTGxz— Ravi Gupta (@FilmiHindustani) July 29, 2025
Also Read… கல்யாணி பிரியதர்ஷன் – நஸ்லேன் நடிப்பில் வெளியானது லோகா படத்தின் டீசர்!