பெரம்பூர் – திருச்சி கிழக்கு தொகுதி.. EVM- இல் விஜய்யின் பெயர்- சின்னம் எங்கே இருக்கும் தெரியுமா?
Tvk Leader Vijay Name: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த இடத்தி இடம் பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் விஜய் பெயர் எங்கு இடம் பெறும்
தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் சின்னங்கள் ஆகியவற்றை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்து, அதில் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் வேட்பாளர்களின் பெயர்கள், பதிவு செய்யப்பட்ட கட்சி, மத்திய மற்றும் மாநில கட்சிகளின் வரிசை மற்றும் அவர்களின் பெயர்கள் அகர வரிசைப்படி இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறாக தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கு இடம்பெற்றிருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் விஜயின் பெயர்
அதன்படி ஜோசப் விஜய் என்ற பெயரின் முதல் எழுத்து தமிழ் எழுத்தாக இல்லாத காரணத்தால், அவரது பெயர் மற்றும் கட்சியின் சின்னம் ஒரே வரிசையில் வேட்பாளர் பட்டியலில் 16- ஆவது இடத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வரிசையில், கடைசி வேட்பாளராக தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் பெயர் இடம் பெறும் என்றும், அவர் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், முதல் இயந்திரத்தில் கடைசி பெயராக தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் பெயர் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஓட்டு வீட்டில் இருந்த செங்கோட்டையனுக்கு பங்களா வீடு-கல்லூரி எப்படி வந்தது… எடப்பாடி கடும் விமர்சனம்!
திருச்சி தொகுதியில் எங்கு இடம் பெறும்
இதே போல, தவெக தலைவர் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அங்குள்ள வேட்பாளர்களின் பட்டியலில் 13- ஆவது இடத்தில் விஜயின் பெயர் இடம்பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் பெயர் இடம் பெற்று விடும் என்று கூறப்படுகிறது. தமிழக அரசியல் களத்திற்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சியாகும்.
அங்கீகரிக்கப்படாத கட்சி வரிசையில் தவெக
இந்த கட்சி தற்போது தான் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில், தமிழக வெற்றி கழகம் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும். அதன்படியே, தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுக்கும். தற்போது வரை, தமிழக வெற்றிக்கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சியாகவே இருந்து வருகிறது. மேலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெயர் மற்றும் கட்சியின் விசில் சின்னம் ஆகியவை அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வரிசையில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “என் மரணத்திற்காக ஒரு கூட்டமே காத்திருக்கிறது”.. ராமதாஸின் அதிரவைக்கும் வாக்குமூலம்!