எடப்பாடி கே.பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கனுமா? முழு விவரம் இதோ!

Edappadi K. Palaniswami Asset Value: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தாக்க செய்துள்ள வேட்பு மனுவில் அவரது சொத்து விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், அவரது பெயரில் இவ்வளவு தான் சொத்துகள் உள்ளனவா.

எடப்பாடி கே.பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கனுமா? முழு விவரம் இதோ!

எடப்பாடி கே. பழனிசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

Published: 

06 Apr 2026 21:35 PM

 IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதே போல, தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், வேட்பாளர்களின் செலவு விவரங்களை ஆய்வு செய்வதற்காக கண்காணிப்பு குழு, வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு, வாக்குப்பதிவு, விவிபாட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கடந்த மார்ச் 30- ஆம் தேதி ( திங்கள்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதற்கு 8 நாட்கள் அவகாசம் இருந்த நிலையில், 4 நாட்கள் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் இருந்தது.

எடப்பாடி கே.பழனிசாமியின் சொத்து மதிப்பு

இதனால், 4 நாட்கள் மட்டுமே அரசு வேலை நாட்கள் ஆக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வந்தன. அந்த வகையில் வேட்பு மனு தாக்களுக்கு கடைசி தேதியான இன்று ஏப்ரல் 6- ஆம் தேதி ( திங்கள்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தான் போட்டியிடக்கூடிய எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவரது சொத்து மதிப்பு ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். இதில், எடப்பாடி பழனிசாமியின் பெயரில் எந்த விதமான விவசாய நிலங்களும் இல்லை எனவும், அசையும் சொத்து ரூ.50 லட்சம் மற்றும் அசையா சொத்து எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Meyyanathan Siva V Tamil Nadu Election: ஆலங்குடி தொகுதியை தக்க வைத்து அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா சிவ வீ.மெய்யநாதன்!

எடப்பாடி மனைவி பெயரில் ரூ.5.61 கோடி சொத்து

இதே போல, அவரது மனைவி ராதா பெயரில் ரூ.3.45 கோடி அசையா சொத்துகளும், ரூ.2.16 கோடியில் அசையும் சொத்துகளும் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்கள் விவரங்களை வேட்பு மனுக்களில் குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையாகும். அதன் அடிப்படையில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சொத்து விவரங்கள் வெளியாகி இருந்தன.

மற்ற கட்சி தலைவர்களுடன் ஒப்பிடுகையில்…

அந்த வகையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. இதில், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் எடப்பாடி கே. பழனிசாமி பெயரில் உள்ள சொத்துக்களை மதிப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: A.Arunmozhi Thevan Tamil Nadu Election: புவனகிரி தொகுதியில் மீண்டும் எம்எல்ஏ-வாக வலம் வருவாரா அருண்மொழிதேவன்!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?