மக்கள் நீதி மய்யம் விருப்ப மனு கட்டணம்… தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… நிம்மதி பெருமூச்சு விட்ட நிர்வாகிகள்!

Makkal Needhi Maiam: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதி மய்யத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றிருந்த கட்சியினர் வருகிற 16- ஆம் தேதிக்குள் அந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்தக் கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் விருப்ப மனு கட்டணம்... தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... நிம்மதி பெருமூச்சு விட்ட நிர்வாகிகள்!

மநீம-இல் விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்

Published: 

07 Apr 2026 21:38 PM

 IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பு மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. இந்த வேட்பு மனுக்களை அதற்கான கட்டண தொகையை செலுத்தி கட்சியினர் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். அதன்படி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு வேட்பு மனு விநியோகம் செய்யப்பட்டது. இதில், சுமார் 60 வேட்பாளர்கள் தலா ரூ.50 ஆயிரம் செலுத்தி வேட்பு மனுக்களை பெற்றிருந்தனர். ஆனால், திடீரென மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை எனவும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார். இதனால், மக்கள் நீதி மய்யத்தில் ரூ.50 ஆயிரம் விருப்ப மனு கட்டணம் செலுத்தி மனுக்களை பெற்றிருந்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தாங்கள் செலுத்திய விருப்பம் மனு கட்டணம் திரும்ப தரப்படும் என்று எண்ணி இருந்தனர்.

கட்சியின் வளர்ச்சி நிதிக்கு சென்ற விருப்ப மனு கட்டணம்

ஆனால், மக்கள் நீதி மய்யத்தினர் செலுத்திய விருப்ப மனு கட்டணம் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்தப்படுவதாக கட்சியின் தலைமை தெரிவித்தது. இதனை கேட்டு, கட்சியினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தி வேட்பு மனுக்களை பெற்ற 60 பேரும் வருகிற ஏப்ரல் 16- ஆம் தேதிக்குள் ( வியாழக்கிழமை) தங்களது கட்டணத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: விஜய பிரபாகரனுக்கு கை கொடுக்குமா விருதுநகர் தொகுதி… கள நிலவரம் கூறுவதென்ன!

ஆறுதல் பெருமூச்சு விட்ட மக்கள் நீதி மய்யத்தினர்

இதனால், வேட்பு மனு கட்டணம் செலுத்திய மக்கள் நீதி மய்யத்தினர் சற்று ஆறுதல் பெருமூச்சு விட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெற வேண்டும் எனவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விரைவில் வெளியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ராஜகோபால் தெரிவித்து இருந்தார்.

தேர்தல் போட்டியிடாமல் பின்வாங்கிய மக்கள் நீதி மய்யம்

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது எனவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் ஆகியோருக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இதன் மூலம் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடாதது உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க: பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?