பெண்கள் பாதுகாப்பில் நோ காம்பிரமைஸ் – அரியலூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை..
TVK Vijay Campaign: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2026 தேதியான இன்று முதல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். முதலில் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவர் விஜய், அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரியலூர், செப்டம்பர் 13, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அரியலூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 அன்று முதல், மாவட்டம் தோறும் பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். முதல் நாளான இன்று அவர் திருச்சியில் தனது பரப்புரையை மேற்கொண்டார். காலை 10:30 மணியளவில் சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் திருச்சி வந்து அடைந்தார். தலைவர் விஜய்க்கு மக்கள் திரளான வரவேற்பு அளித்தனர்.
திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலகம், பாலக்கரை மற்றும் மரக்கடை ஆகிய நான்கு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. காலை 11:30 மணியளவில் இந்த பிரசாரம் முடிவடைய வேண்டிய நிலையில், தொண்டர்கள் கூட்டம் அலைமோதியதால் தமிழக வெற்றி கழகத் தலைவரின் வாகனம் எறும்பைப் போல மெதுவாக நகர்ந்தது.
மேலும் படிக்க: திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? திருச்சி பரப்புரையில் விஜய் சரமாரி கேள்வி..
திருச்சியில் விஜய் பிரச்சாரம்:
இதன் காரணமாக சுமார் 5 மணி நேரம் தாமதமானது. பின்னர் திருச்சி மரக்கடைக்கு சென்ற தலைவர் விஜய், அங்கு உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு பரப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திருச்சி என்றாலே திருப்புமுனை தான். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன,” எனக் குறிப்பிட்டார். மேலும் திமுக அரசை விமர்சித்த பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தார்.
மேலும் படிக்க: திருச்சி பரப்புரையில் சொதப்பிய மைக்.. கடுப்பான மக்கள்.. சுருக்கமாக பேசி முடித்த விஜய்..
இதற்கிடையில், தலைவர் விஜய் பேசுகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தலைவர் விஜய் தனது பேச்சை சுருக்கமாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அரியலூர் மாவட்டத்திற்குப் புறப்பட்டார்.
அரியலூரில் பரப்புரை:
திருச்சியிலிருந்து அரியலூர் செல்ல சுமார் 5 மணி நேரம் எடுத்துக்கொண்டது. வழிநெடுப்பிலும் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்தனர். நீண்ட பயணத்துக்குப் பிறகு, அரியலூரில் அண்ணா சிலை முன்பு தலைவர் விஜய் உரையாற்றினார். “சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பாஜக செய்யக்கூடியது துரோகம் ஆகும். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக துரோகம் செய்கிறது என்றால், இங்கு திமுக நம்ப வைத்து ஏமாற்றுகிறது. 505 தேர்தல் வாக்குறுதிகளை திமுக கொடுத்தது. அதில் பாதி கூட நிறைவேற்றாமல், ‘எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம்’ எனக் கதை விடுகிறீர்கள். ரிலீஸ் வேறு, ரியாலிட்டி வேறு என்று சொன்ன நீங்களே இப்போது ரீல் விடுகிறீர்கள்.
அடுக்கடுக்காக முன்வைத்த கேள்விகள்:
- ‘கேஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ. 100 தருகிறோம்’ என்றீர்களே, கொடுத்தீர்களா?
- ‘அனைத்து பெண்களுக்கும் ரூ 1000 கொடுப்போம்’ என்றீர்களே, கொடுத்தீர்களா?
- ‘டீசல் விலை ரூ. 3 குறைக்கப்படும்’ என்றீர்களே, குறைத்தீர்களா?
- ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்றீர்களே, ரத்து செய்தீர்களா?
- ‘கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’ என்றீர்களே, செய்தீர்களா?
- ‘வருடத்திற்கு 10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை தருவோம்’ என்றீர்களே, கொடுத்தீர்களா?
- ‘மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தருவோம்’ என்றீர்களே, கட்டித் தந்தீர்களா?
- ‘ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு சொந்த வாகனம் வாங்க ரூ. 10,000 மானியம் தருவோம்’
- என்றீர்களே, கொடுத்தீர்களா? ‘முதியோர் உதவித் தொகை ரூ. 1500 உயர்த்தப்படும்’
- என்றீர்களே, உயர்த்தினீர்களா?” என பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்து பேசியுள்ளார்.
மேலும், “வறட்சியான மாவட்டங்களில் முதல் மாவட்டமாக உள்ளது அரியலூர். சிமெண்ட் உற்பத்தி முந்திரி தொழில், பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படவில்லை.
மருதையாற்றத்தின் குறுக்கே வாரணவாசி தடுப்பணை கட்டுவது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற கோரிக்கை என்னவானது. இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தும் போதுமான பேருந்து சேவை இல்லாதது ஏன்” என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ” அதை செய்வோம் இதை செய்வோம் என்று பொய்யான வாக்குறுதிகளை எந்றைக்கும் தரமாட்டோம். எது நடைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டும்தான் சொல்லுவோம்.
ஆனால் கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், அடிப்படை சாலை வசதி, மின்சாரம் என்று அடிப்படைத் தேவைகளை சமரசமே இல்லாமல் நிறைவேற்றுவோம். பெண்கள் பாதுகாப்பில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சமரசமே கிடையாது” என பேசியுள்ளார்.