Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்சி பரப்புரையில் சொதப்பிய மைக்.. கடுப்பான மக்கள்.. சுருக்கமாக பேசி முடித்த விஜய்..

TVK Vijay Campaign: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்களிடம் உரையாற்றுவதற்காக மைக்கை எடுத்து பேசத் தொடங்கினார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவரது குரல் தொண்டர்களுக்கு சரியாக கேட்கவில்லை. இதனால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருச்சி பரப்புரையில் சொதப்பிய மைக்.. கடுப்பான மக்கள்.. சுருக்கமாக பேசி முடித்த விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Sep 2025 17:47 PM IST

திருச்சி, செப்டம்பர் 13, 2025: 2026 தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் முதல் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவர் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சுமார் 23 நிபந்தனைகள் காவல்துறை தரப்பில் விதிக்கப்பட்டன.

திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவர் விஜய்:

இன்று காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் திருச்சி சென்ற தலைவர் விஜய்க்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 11.30 மணிக்கு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரை சுமார் 5 மணி நேரம் தாமதமாகி நடைபெற்றது. தொண்டர்கள், தலைவர் விஜயின் வாகனத்தைச் சூழ்ந்ததால் மக்கள் வெள்ளத்துக்கிடையே அவர் மெதுவாக நகர்ந்து சென்றார். விமான நிலையத்திலிருந்து டிவிஎஸ் டோல் கேட், தலைமை அஞ்சலகம், ரவுண்டானா, பாலக்கரை மற்றும் மரக்கடை ஆசிரியர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. கடைசியாக, மரக்கடை பகுதியில் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:  திருச்சி என்றாலே திருப்புமுனைதான் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..

அதனைத் தொடர்ந்து, அவர் மரக்கடைக்கு வந்து, தனது பிரச்சார வாகனத்தில் இருந்து மேலே நின்று மக்களைச் சந்தித்தார். அப்போது மக்கள் ஆரவாரத்துடன் விஜயை வரவேற்று, “தவெக” என முழக்கங்களை எழுப்பினர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜய் உரையில் சிக்கல்:

இந்த சூழலில், அவர் மக்களிடம் உரையாற்றுவதற்காக மைக்கை எடுத்து பேசத் தொடங்கினார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவரது குரல் தொண்டர்களுக்கு சரியாக கேட்கவில்லை. பின்னர் உடனடியாக மாற்று ஏற்பாடாக வேறு மைக்கைப் பயன்படுத்தினார். ஆனாலும், அப்போதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரது உரை தெளிவாகக் கேட்கவில்லை.

மேலும் படிக்க: திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? திருச்சி பரப்புரையில் விஜய் சரமாரி கேள்வி..

இதனால், சுமார் 7 மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மைக் கோளாறின் காரணமாக, தலைவர் விஜய் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.  தலைவரை நேரில் காண காலை முதலே காத்திருந்த தொண்டர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறு அரியலூர் பகுதியில் ஏற்படாது என்றும், அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.