Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TTV Dhinakaran: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகவா? – இபிஎஸ்க்கு டிடிவி தினகரன் பதிலடி!

AIADMK: 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்கள் தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதில் பாஜகவின் பங்கு இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி பொய் கூறுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TTV Dhinakaran: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகவா? – இபிஎஸ்க்கு டிடிவி தினகரன் பதிலடி!
டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 16 Sep 2025 12:07 PM IST

தஞ்சாவூர், செப்டம்பர் 16: 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.,க்கள் தானே தவிர பாஜக அல்ல என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் உட்கட்சி பூசலானது வெளிப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 சட்டமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என இரட்டை தலைமையில் சந்தித்த அதிமுக இந்த முறை எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்கிறது. இந்த நான்கு வருட காலகட்டத்தில் அதிமுகவில் பல்வேறு எதிர்பாராத திருப்பங்களும் நிகழ்ந்தது. கட்சியின் மிக முக்கிய பிரமுகராக வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

செங்கோட்டையன் விடுத்த கோரிக்கை

இதனிடையே அதிமுக மூத்த தலைவர்களில் ஒன்றாக ஒருவரான செங்கோட்டையன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், அதிமுக ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி வசப்படும் என கடந்த 2025 செப்டம்பர் 5ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் அதிமுகவில் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கோட்டையன் கருத்தை ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

Also Read:  கட்சியை உடைக்க பார்க்கின்றனர்.. செங்கோட்டையனுக்கு இபிஎஸ் பதிலடி!

ஆனால் இதற்கு அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று (செப்டம்பர் 15) அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பொதுகூட்டத்தில் பேசிய அவர், ‘ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சிலர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க பார்த்த நிலையில் அதனை காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருந்த பாஜகவினர் தான். எனவே நன்றி மறப்பது நன்றன்று என்பதால் நாங்கள் நன்றியோடு இருக்கிறோம். சிலர் (ஓ.பன்னீர்செல்வம் தரப்பு) அதிமுக ஆட்சியை 2017 ஆம் ஆண்டு கவிழ்ப்பதற்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் அவர்களை மன்னித்து நாங்கள் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம்.

மீண்டும் அவர்கள் திருந்தவில்லை. அதிமுகவின் கோவிலாக அறியப்படும் கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்தார்கள். அவர்களை மீண்டும் ஏன் கட்சியில் சேர்க்க வேண்டும்? மேலும் இன்னொருவர் (டிடிவி தினகரன்) அதிமுக ஆட்சியை தவிர்ப்பதற்கு 18 எம்எல்ஏக்களை கடத்திக் கொண்டு போனார். அவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் தான் நிற்பார்கள் என்று அவர் ஆவேசமாக பேசினார்.  இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read:  இபிஎஸ் குறிவைத்தால் தப்பாது.. கூட்டணிக்கு வராத கட்சிகள் குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்!

அதிமுகவை காப்பாற்றியது எம்.எல்.ஏ.,க்கள் தான்

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  “2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது அன்றைய 122 எம்எல்ஏக்கள் தான் தவிர பாஜக கிடையாது.  கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததால் தான் அவர் முதலமைச்சர் ஆனார். தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார். பாஜக அதிமுக அரசை காப்பாற்றியது என பேசுவது தவறு.

சசிகலாவின் பேச்சைக் கேட்டு தான் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. துரோகத்தை தவிர எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு எதுவும் தெரியாது. தோல்வி பயத்தில் பழனிச்சாமி உளறுவது தெரிகிறது. நிச்சயம் அவர் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார். அவர் நம்பகத்தன்மையற்ற மனிதர் என்பது அனைவருக்கும் தெரியும். 2026 தேர்தலில் அதிமுக தோற்றால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். இந்த முறை நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்” எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.