தேர்தல் நடத்தை விதி மீறல் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பெ.சண்முகம் புகார்
தவெக தலைவர் விஜய் தான் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 20, 2026 அன்று ரோட் ஷோ சென்றபோது அந்தோணியர் ஆலையத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். அப்போது அவர் கட்சி துண்டு அணிந்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெ.சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.

விஜய் - பெ.சண்முகம்
சென்னை, ஏப்ரல் 20 : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 20, 2026 அன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 19, 2026 அன்று ரோட் ஷோ சென்றார். அப்போது சர்ச், கோவில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
விஜய் மீது பெ.சண்முகம் புகார்
குறிப்பாக அவர் திருச்சி வயர்லஸ் சாலையில் உள்ள அந்தோணியர் ஆலயத்தில் மண்டியிட்டபடி சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டது தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் பின்னர் மசூதி மற்றும் கோவிலுக்கு சென்றார். இந்த நிலையில் அவர் கட்சி துண்டு அணிந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்ற விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!
தேர்தல் விதிமுறைகளின் படி மத வழிபாட்டு தலங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் அதனை தவெக தலைவர் விஜய் மீறியுள்ளதாகவும் பெ.சண்முகம் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேவாலயத்தில் விஜய் பிரார்த்தனை
Thalapathy Vijay performed a kneeling prayer at St. Antony’s Church in Trichy.💒✝️
Ahead of the Tamil Nadu elections on April 23, he walked on his knees from the entrance to the main prayer area as an act of devotion @TVKVijayHQ pic.twitter.com/t20owEVT7w
— Arun Vijay (@AVinthehousee) April 19, 2026
இதையும் படிக்க : தவெக தலைவர் விஜய்யின் தலை மீது பட்டு தெறித்த பாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த பவுன்சர்கள்!
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் ஏப்ரல் 20, 2026 அன்று வில்லிவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும் அவரது கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஏப்ரல் 21, 2026 நாளை கடைசி நாள் என்பதால் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.