Tanjavur Constituency Election 2026: டெல்டா மாவட்டமான தஞ்சை சட்டமன்ற தொகுதி.. இம்முறையும் திமுக வெற்றியை கைப்பற்றுமா?

Tamil Nadu Elections 2026: தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில் திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே இது திமுகவின் கோட்டையாகவும் பார்க்கப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு தேர்தலிலிருந்து தற்போது வரை திமுக இந்த தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.

Tanjavur Constituency Election 2026: டெல்டா மாவட்டமான தஞ்சை சட்டமன்ற தொகுதி.. இம்முறையும் திமுக வெற்றியை கைப்பற்றுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

17 Mar 2026 19:41 PM

 IST

மார்ச் 17, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சட்டமன்றத் தொகுதி அரசியல் ரீதியாக அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி ஒரு பொது தொகுதி ஆகும். இதில் தஞ்சை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் அடங்குகின்றன. குறிப்பாக Thanjavur, Vallam, நாகத்தான் பட்டி உள்ளிட்ட பகுதிகளும் அருகிலுள்ள சில கிராமங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

தஞ்சை சட்டமன்ற தொகுதி:

தஞ்சை தொகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கலை, கலாச்சாரம் மற்றும் வேளாண்மை முக்கிய பங்காற்றும் பகுதி என்பதால் இத்தொகுதியில் அரசியல் போட்டி பெரும்பாலும் கடுமையாகவே இருந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக கட்சியின் வேட்பாளர் T. K. G. நீலமேகம் 1,03,772 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பி 56,623 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்தில் மக்கள் நீதி மய்யமும் இடம்பிடித்தன.

மேலும் படிக்க: நெருங்கும் தேர்தல்.. 2,160 பறக்கும் படைகள் அமைப்பு.. ரூ.23.28 கோடி பறிமுதல்..

திமுகவின் கோட்டையாக இருக்கு தஞ்சை:

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில் திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே இது திமுகவின் கோட்டையாகவும் பார்க்கப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு தேர்தலிலிருந்து தற்போது வரை திமுக இந்த தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 2.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் போட்டி வேட்பாளரை அறிவிக்க மாட்டார் – திலகபாமா..

முக்கிய பிரச்சனைகள் என்ன?

காவிரி நீர் மற்றும் விவசாய பிரச்சினைகள் இந்த தொகுதியில் முக்கிய பிரச்சினைகளாக பார்க்கப்படுகின்றன. அதேபோல் வேளாண்மை வருமானம், நெல் விலை, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மற்றும் வடிகால் வசதிகள், வேலைவாய்ப்பு, இளைஞர் இடம்பெயர்வு, காவிரி டெல்டா சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் மக்கள் தரப்பில் நீண்டகால கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி, அதிமுக – திமுக இடையிலான போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி