அரசியலில் தடம் பதிக்கும் இயக்குநர் சுந்தர்.சி.. சட்டமன்றத் தேர்தலில் போட்டி.. எந்த கட்சியில் தெரியுமா?

Tamilnadu Assembly election: முன்னதாக, அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அதில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை அதிமுக சார்பில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக தரப்பில் புதிய முகங்களுக்கு அதிகளவு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அரசியலில் தடம் பதிக்கும் இயக்குநர் சுந்தர்.சி.. சட்டமன்றத் தேர்தலில் போட்டி.. எந்த கட்சியில் தெரியுமா?

சுந்தர்.சி

Updated On: 

28 Mar 2026 12:04 PM

 IST

Tamilnadu polls 2026: புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது, அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜக சார்பில் ஒரு தொகுதியும் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தாமரைச் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: திமுக கூட்டணி தொகுதி பட்டியல் வெளியாவதில் தாமதம்.. காங்., தேமுதிக விருப்ப இடங்களை கேட்டு பிடிவாதம்!!

புதிய நீதிக் கட்சி சார்பில் சுந்தர்.சி போட்டி:

அந்தவகையில், புதிய தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதிக்கு திங்கட்கிழமை வேட்பாளர் அறிவிகப்பட உள்ளார். பாஜக தர வேண்டிய அந்த தொகுதி இன்னும் என்ன என்பது முடிவாகவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த 2024ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணயில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து சுந்தர்.சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஏ.சி.சண்முகம் தனது ட்விட்டர் பதிவில், அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு   சுந்தர் சியை வேட்பாளராக நிறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.  தொடர்ந்து, திங்கட்கிழமை பாஜக சார்பில் ஒதுக்கப்படும் தொகுதிக்கு வேட்பாளர் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

150 வேட்பாளர்களை அறிவித்த அதிமுக:

முன்னதாக, அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அதில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை அதிமுக சார்பில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக தரப்பில் புதிய முகங்களுக்கு அதிகளவு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

கணவர் குறித்து குஷ்பு நெகிழ்ச்சி:

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி புதிய நீதிக்கட்சி (PNK) சார்பில் மதுரை வேட்பாளராக அரசியலில் தடம் பதிக்கிறார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது மறைந்த தந்தை சிதம்பரம்பிள்ளை ஆசியுடனும், 94 வயதாகும் தனது தாய் தெய்வானை சிதம்பரம்பிள்ளை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்த்துகளுடனும் உங்கள் ஆதரவை அவர் நாடுகிறார்.

ஏ.சி.சண்முகத்தின் வழிகாட்டுதலின் கீழும், எடப்பாடி பழனிசாமி ஆதரவுடனும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அனைத்துத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் காரியகர்த்தாக்களின் ஒத்துழைப்புடன், அவர் நிச்சயம் வெற்றி பெற்று, எப்போதும் போல ஒரு மக்கள் மனிதராக இருப்பார் என உறுதி அளிக்கிறார்.

இதையும் படிக்க: தவெகவுடன் புதிய தமிழகம் கூட்டணி?.. “12 தொகுதிகளில் வெற்றி உறுதி”.. கிருஷ்ணசாமி அதிரடி!!

கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்து வரும் அவர், தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய மக்களுக்குத் தனது சிறந்த பங்களிப்பைத் தருவார் என்பதில் அவருடைய மனைவியாக நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். உங்களின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் நாங்கள் பணிவுடன் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்