ஐபிஎல் போட்டிகளை தடையின்றி பார்க்கணுமா? ஏர்டெல், ஜியோ வழங்கும் சிறந்த டேட்டா பிளான் – எப்படி தேர்வு செய்வது?
IPL 2026 Live Streaming: ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 28, 2026 இன்று முதல் துவங்குகிறது. இந்த போட்டிகளை எதில் பார்க்கலாம் மற்றும் தடையின்றி பார்க்க சிறந்த டேட்டா பிளான்கள் எது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்த 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் (IPL) போட்டிகள் மார்ச் 28, 2026 இன்று துவங்கி வருகிற மே 31, 2026 அன்று வரை நடைபெறவிருக்கின்றன. இந்த போட்டிகள் மதியம் 3.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பெரும்பாலான ரசிகர்கள் மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவி வழியாகவும் ஐபிஎல் போட்டிகளை காண முடியும். இந்த டிவி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி பெற்றுள்ளது. மேலும், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் மாத சந்தா ரூ. 79 முதல் தொடங்கி, ஆண்டு சந்தா ரூ.499க்கு சப்ஸ்கிரைப் செய்து போட்டிகளை காண முடியும். இதன் மூலம் போராடியாக நேரடியாக பார்க்க முடியும் என்பதுடன் ஹைலைட்ஸ் மற்றம் ரீப்ளை ஆப்சனுடன் கிடைக்கிறது.
மேலும் ஐபிஎல் போட்டிகளை இடையூறு இல்லாமல் பார்க்க சரியான டேட்டா பிளான் மிகவும் முக்கியம். இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிகளுக்ககான ஆஃபர்களை வழங்குகின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Vi
வோடபோன் ஐடியா (Vi) கூடுதல் டேட்டா, அல்லது ஆட் ஆன் திட்டங்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளை தடையின்றி கண்டுகளிக்கலாம். Vi பயனர்களுக்கு ரூ. 175 ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 10 ஜிபி வழங்குகிறது. மேலும் ரூ.248க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதே போல ரூ.101க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு 5 ஜிபி வழங்குகிறது. ரூ.151 ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு 4ஜிபி டேட்டா வழங்குகிறது.




இதையும் படிக்க : ஐபிஎல் 2026 தொடக்கம்.. 10 அணிகள், 74 போட்டிகள்.. தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
ஏர்டெல்
பாரதி ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு பல அதிரடி ஆஃபர்களை வழங்குகிறது. அதன் படி ரூ.449க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 4 ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 398க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதே போல ரூ.1029க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கும், ரூ3999க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கும் வேலிடிட்டி கிடைக்கும்.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது பயனர்களுக்கு ரூ.949க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதே போல ரூ. 195க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு 15ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு 5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதையும் படிக்க : IPL 2026: ஹிந்தியில் வர்ணனையாளராக களமிறங்கும் அஸ்வின்.. வெளியான வர்ணனைக் குழு பட்டியல்..!
லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு அதிக டேட்டா தேவப்படும். மேலும் தினமும் ஐபிஎல் போட்டிகள் பார்க்கும் ரசிகர்கள் தினசரி டேட்டா பிளானும், சில போட்டிகள் மட்டும் பார்க்கும் சிறிய டேட்டா பிளானை தேர்ந்தெடுக்கலாம். தடையின்றி ஐபிஎல் போட்டிகளை காண இந்த சீசன் முழுவதற்கும் ஏற்ற படி சரியான டேட்டா பிளானை தேர்வு செய்வது அவசியம்.