விஜய் நள்ளிரவில் திடீர் பயணம்.. திருச்செந்தூரில் அதிகாலை சுவாமி தரிசனம்.. எதிரிகளை வீழ்த்த சிறப்பு யாகம்?

Tvk Leader Vijay Swamy Darshan: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அங்கு, அரசியலை எதிரிகளை வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு யாகம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நள்ளிரவில் திடீர் பயணம்.. திருச்செந்தூரில் அதிகாலை சுவாமி தரிசனம்.. எதிரிகளை வீழ்த்த சிறப்பு யாகம்?

திருச்செந்தூரில் விஜய் சிறப்பு தரிசனம்

Updated On: 

28 Apr 2026 06:36 AM

 IST

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், மே 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், தேர்தல் மற்றும் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஓய்வெடுப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆன்மீக பயணமாக நேற்று நள்ளிரவு திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இதற்காக அவர், தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையத்துக்கு சென்றடைந்தார்.

பட்டு வேஷ்டி – பட்டு சட்டையில் விஜய் தரிசனம்

அங்கு, விஜயை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடினர். மேலும், கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு, பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் தவெக தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 28) அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.

மேலும் படிக்க: 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு – தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்

எதிரிகளை வீழ்த்த விஜய் சிறப்பு யாகம்

முன்னதாக, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வேல் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவும், அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சத்குரு சம்ஹார யாகம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே, தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. இந்த யாகத்தில் விஜய் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மேற்கொள்ள உள்ளார்.

ஜோதிடர்கள் கூறியதன் அடிப்படையில்…

மேலும், விஜய்க்கு நெருக்கமான சிலர் இந்த யாகத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அந்த கட்சியினர் வட்டாரத்தில் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் இந்து மத சடங்குகள் மீது அதிக நம்பிக்கை உடையவர். இதனால், கட்சி ஆரம்பித்தது முதல் ஜோதிடரின் அனுமதி இல்லாமல் எதையும் செய்தது கிடையாது. இதனாலையே, கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய இடத்துக்கு விஜய் வளர்ந்துள்ளார். தற்போது, ஜோதிடர்கள் கூறியதன் அடிப்படையிலேயே, விஜய் இந்த யாகத்தை நடத்த உள்ளார் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரை உடைத்தது த.வெ.கவினரா? போலீஸ் சொன்ன விளக்கம்..

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?