Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.

Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்

Updated On: 

29 Apr 2026 19:24 PM

 IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என 4 முனை போட்டி நிலவியது. 234 தொகுதிகளிலும் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) எண்ணப்பட உள்ளன. இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்ப்பு அனைத்து மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கமாகும்.

வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

அதன்படி, தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இதனால், தேர்தல் முடிவடைந்து சுமார் 5 நாள்கள் ஆகியும் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) வெளியானது. இதில்,

சாணக்யா ஸ்டாட்டடிஸ்:

  • திமுக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகள்.
  • அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகள்.
  • தமிழக வெற்றி கழகம் 13 முதல் 18 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 5 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளன.

பீப்பிள்ஸ் பல்ஸ்:

  • திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள்.
  • அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 2 முதல் 6 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

என். டி. டி. வி. பீப்பிள்ஸ் பல்ஸ்:

  • திமுக 125 முதல் 145 தொகுதிகள்.
  • அதிமுக 65 முதல் 80 தொகுதிகள்.
  • தமிழக வெற்றி கழகம் 18 முதல் 24 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 2 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு.

மேட்ரிஸ்:

  • திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகள்.
  • அதிமுக 87 முதல் 110 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் 10 முதல் 12 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 0 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு.

ரிபப்ளிக் பி மார்க்:

  • திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள்.
  • அதிமுக கூட்டணி 65 முதல் 85 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் 16 முதல் 26 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 1 முதல் 6 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு.

அக்னி நியூஸ் சர்வீஸ்:

  • திமுக கூட்டணி 169 தொகுதிகள்.
  • அதிமுக கூட்டணி 64 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் 1 தொகுதி.
  • பிற கட்சிகள் 0 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு.

பீப்புள் இன்சைட்:

  • திமுக கூட்டணி 120 முதல் 140 தொகுதிகள்.
  • அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் 30 முதல் 40 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 0 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

பீப்புள் பல்ஸ்:

  • திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள்.
  • திமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள்.
  • தமிழக வெற்றி கழகம் 18 முதல் 24 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 0 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

ஜேவிசி டைம்ஸ் நவ்:

  • அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகள்.
  • திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 15 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 0 தொகுதிகள்.

வோட் வைப்:

  • திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகள்.
  • அதிமுக கூட்டணி 114 முதல் 124 தொகுதிகள்.
  • தமிழக வெற்றி கழகம் 4 முதல் 10 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 0 தொகுதிகள்.

சி.என்.என்.நியூஸ் 18:

  • அதிமுக கூட்டணி 114 முதல் 124.
  • திமுக கூட்டணி 103 முதல் 113.
  • தமிழக வெற்றி கழகம் 4 முதல் 10.
  • பிற கட்சிகள் 0.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதுடன், மு.க.ஸ்டாலின் 2- ஆவது முறையாக ஆட்சி அரியணையில் ஏற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..