Tamil Nadu Election 2026 Highlights : தைலாபுரத்தில் தாயை சந்தித்த அன்புமணி – பரபரப்பு தகவல்
- Tamil Nadu Assembly Election 2026 Live : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் மிகத்தீவிரமாக வேலை செய்து வருகின்றன. அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கட்சி தலைவர்கள் எங்கெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள், மற்றும் தேர்தல் அப்டேட்ஸ்களையும் பார்க்கலாம்
Tamil Nadu Election : தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாஜக தலைவர்கள் என அனைவருமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரி விசிட் செய்கிறார். அவர் ரோடு ஷோவில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவின் அண்ணாமலையும் பிரசார திட்டங்களை கையில் எடுத்துள்ளார். அவர் அடுத்தடுத்து பல இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். மேலும் பாஜகவின் ஆளும் முதலமைச்சர் சிலர் தமிழகம் வந்து பிரசாரம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 12ம் தேதி நடக்கும் தலைவர்களின் பிரசாரம், தேர்தல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்
LIVE NEWS & UPDATES
-
தைலாபுரத்தில் அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பரப்புரைக்காக சென்றிருக்கும் நிலையில் தனது தாய் சரஸ்வதியை பார்க்க தைலாபுரம் இல்லத்திற்குச் சென்ற அன்புமணி ராமதாஸ் அவரது தாயிடம் நலம் விசாரித்தார்.
-
மாநில அரசின் அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் விளக்கம்
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திரிபு. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது. மாநில அரசின் அதிகாரத்தை அதிகார ததை யாரும் பறிக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
தமிழகத்தை வட்டமிடும் பாஜக பருந்தை விரட்டியடிக்க வேண்டும் – மு. க. ஸ்டாலின் அழைப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் காலூன்றி ஆட்சி அமைக்க தொடங்கும் பாரதீய ஜனதா கட்சி என்ற பருந்தை விரட்டி அடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
ஐபிஎல் போல டெல்லியை தோற்கடித்து தமிழ்நாடு வெல்லும்
ராமநாதபுரம் பாடிக்குடியில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை சென்னை வீழ்த்தியது போல, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் டெல்லியை தோற்கடித்து தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
-
‘என்னை செய்திகளில் பார்க்காத நாளே இருக்க முடியாது’
ராமநாதபுரம் பரமக்குடியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், என்னை செய்திகளில் பார்க்காத நாளே இருக்க முடியாது. ஆய்வுக்கூட்டம், கள ஆய்வு மற்றும் அரசு நலத்திட்ட விழாக்கள் என தொடர்ந்து இயங்கிக்க்கொண்டு இருந்தேன் என்றார்.
-
பாடம் புகட்டப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சாக்கடைக்கு சரி சமமாக வந்து விழுகிற பழனிசாமியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டப்போகும் நாள்தான் ஏப்ரல் 23 என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது, அடுத்தவர் மரணத்தை எதிர்பார்த்து பேசுவது, பெண்களை கண்ணியம் இல்லாமல் பேசுவது என தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து பேசி வருகிறார் என்றார்.
-
திமுகவில் இணைந்தார் அஜிதா ஆக்னல்
தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல், திமுகவில் இணைந்தார். மாவட்ட செயலாளர் பதவி வழங்காததால் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வேட்பாளர் பட்டியலில் அஜிதாவின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் அதிருப்தியில் இருந்த அவர், ஏப்ரல், 12, 2026 அன்று கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
-
மீனவர்களுக்கான பாதுகாப்பு உரிமை தொகை ரூ.20 ஆயிரம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீனவர்களுக்கான பாதுகாப்பு உரிமை தொகை ரூ.20 ஆயிரம், மீனவர்கள் படகு பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை கன்னியாகுமரி பரப்புரையில் வெளியிட்டார்.
-
தமிழ்நாட்டில் ஏஐ பல்கலைக்கழகம்
கன்னியாகுமரியில் மக்களிடையே பேசிய தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாறும். தமிழ்நாட்டில் ஏஐ பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். மேலும், செயற்கை நுண்ணறிவுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றார்.
-
சட்டசபையிலேயே விவாதம்
கன்னியாகுமரிில் பேசிய தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அப்போது பேசிய அவர், “10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் கட்டாயம் பதில் அளிக்கப்படும். பத்து லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும் என்றார்.
-
வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்
-கன்னியாகுமரியில் விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆவணங்களின் பெயரால் லஞ்சம் வாங்குவது, அலைக்கழிப்பதை அனுமதிக்க மாட்டோம். நலத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம் வீடு தேடி அரசு திட்டம் வரும். நமது அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் “வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்” உருவாக்கப்படும். பல சேவைகள் அந்த செயலியில் இருக்கும் என்று தெரிவித்தார்.
-
தமிழ்நாடு பிரிவிலேஜ் கார்டு
கன்னியாகுமரியில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆதார் கார்டு போல தமிழ்நாடு பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும். அரசின் சேவைகளை அதன்மூலம் பெறமுடியும். நமது அரசில் பொதுமக்கள் அனைவரும் அரசில் பங்காக இருப்பார்கள் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
-
காரைக்குடியில் பேச முடியாததற்கு விஜய் வருத்தம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கன்னியாகுமரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கன்னியாகுமரியில் உள்ள மக்களுக்கு வணக்கம் சொன்ன போது காரைக்குடியில் உள்ள மக்களுக்கும் வணக்கம் தெரிவித்தார். மேலும் காரைக்குடியில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார்.
-
பாஜக புல்டோசரை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம் – பிருந்தா காரத்
அதிமுகவின் பின்னாள் ஒளிந்துகொண்டு பாஜக புல்டோசர் வருவதை தமிழகத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
மு.க.ஸ்டாலினின் திட்டங்களை பின்பற்றும் பிற மாநில முதல்வர்கள் – வைகோ புகழாரம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை பல மாநில முதல்வர்களும் பின்பற்றுவதாக வைகோ புகழாரம் சூட்டிப் பேசினார்.
-
விஜய் சைக்கிள் பிரசாரம்
காரைக்குடியை போல, கன்னியாகுமரி பிரசாரத்திலும், வாகனத்தில் இருந்து இறங்கி, சைக்கிள் ஓட்டி சென்று விஜய் வாக்குசேகரித்தார். அவரது பின்னாடியே திரண்டு வந்த தொண்டர்கள் கூட்டம் ஓடி வந்தனர்.
-
டிஆர்பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி
அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் டிஆர்பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி உண்டு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார்.
-
ராமநாதபுர மாவட்ட மீனவ சங்கங்கள் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினர், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
-
விஜய்யின் வாகனத்தை பின்தொடரும் பைக்குகள் தடுத்து நிறுத்தம்
கன்னியாகுமரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ரோட் ஷோ நடத்தவிருக்கிறார். இந்த நிலையில் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பைக்கில் பின் தொடரும் தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
-
விஜய் அதிருப்தி
சென்னை நுங்கம்பாக்கத்தில் வரும் ஏப்ரல் 16, 2026 அன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பணியில் வேட்பாளர்களுக்கு நிர்வாகிகள் ஒத்துழைக்கவில்லை என்ற புகார் தொடர்பாக தவெக தலைவர் விஜய் விசாரணை நடத்தவுள்ளாராம். இந்த ஆலோசனை கூட்டத்தில் 800 பேர் வரை பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மக்களோடு மக்களாக களப்பணியாற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின் உத்தரவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும். தேர்தல் களத்தில் திமுக தொண்டர்களின் பணி என்பது எதிரிகளாலும் வியந்து பார்க்கக் கூடியது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. செல்லும் இடம் எங்கும் எழுச்சியைக் காண்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
இது எப்படி ஜனநாயகம் ஆகும்? – சீமான் கேள்வி
ஆண்டிபட்டியில் பேசிய சீமான், நாதகவுக்கு வாக்களித்து இந்த தீய ஆட்சி முறைக்கு, தீய அரசியல் முறைக்கு தீ வைக்க வேண்டும். ஆண்டிபட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இது எப்படி ஜனநாயகம் ஆகும்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.
-
ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்த அன்பில் மகேஷ்
பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது திருச்சியில் ஆட்டோ ஓட்டி பிரசாரம் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
-
சாலைகளில் உற்சாக வரவேற்பு
சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும் விஜய், செல்லும் வழியில் கூடியிருந்த தொண்டர்களுக்கு கை அசைத்தபடி சென்றார். சாலையில் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது
-
யாருக்கு ஓட்டு போடணும்?
குறிப்பாகத் தொண்டர்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இதுவரை தலைவர் அறிவிக்காததால் குழப்பத்தில் உள்ளனர்.
-
எடப்பாடி தொகுதியில் தவெக யாருக்கு ஓட்டு?
தமிழகத்தில் மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் எல்லாம் விஜய்யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர்.
-
திடீர் வாக்குவாதம் ஏன்?
ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, காவலர் பிரபாகரன் உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தான் காவலரின் மனைவி கேள்வி கேட்டுள்ளார்.
-
விஜய்யை பின் தொடரும் ரசிகர்கள்
குமரி நோக்கிச் செல்லும் விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள், தொண்டர்கள் பின் தொடர்ந்து செல்கின்றனர். செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது
-
TVK Vijay : தூத்துக்குடியில் தவெக விஜய்
கன்னியாகுமரியில் ரோடு ஷோ செல்லவுள்ள விஜய் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்றடைந்தார். தூத்துட்க்குடி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
-
எம்.பி கனிமொழியிடம் வாக்குவாதம்
ஆலங்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த திமுக எம்.பி கனிமொழியிடம், காவலர் ஒருவரின் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
மூத்த குடிமக்களுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருக்கும் வீட்டிற்கே தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று தபால் வாக்கு பெற்று வருகின்றனர். இந்த வாக்குப்பதிவானது இன்று, நாளை மற்றும் ஏப்.17ம் தேதி நடைபெறுகிறது.
-
Ramadoss Team : ராமதாஸ் தரப்பு வியூகம்
ராமதாஸ் தரப்பில் சேலம் மேற்கு தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ அருள் மீண்டும் போட்டியிடுகிறார். பாமக பொதுச்செயலாளர் முரளிசங்கர் காட்டுமன்னார் கோவில் தொகுதியிலும், மாக்கா ஸ்டாலின் கும்பகோணத்திலும் களம் காண்கின்றனர்.
-
முக்கியப் பிரமுகர்களை களமிறக்கும் சசிகலா
அதிமுகவின் 9 முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து, அந்தந்தத் தொகுதிகளில் நன்கு அறிமுகமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சசிகலா களமிறக்கியுள்ளார்.
-
சசிகலா மற்றும் ராமதாஸ் தரப்பு புது பிளான்
அதிமுக மற்றும் அன்புமணி தலைமையிலான பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் சசிகலா மற்றும் ராமதாஸ் தரப்பு களம் இறங்கியுள்ளது
-
தொடர்ந்து ரத்தாகும் விஜய் பரப்புரை
தொடர்ந்து விஜய்யின் பரப்புரை கூட்டம் ரத்து செய்யப்படுவதால் விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் வருத்தத்தில் உள்ளனர்.
-
பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
விஜய் வருகையால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பும், முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன
-
விஜய் ரோடு ஷோ
பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் விஜய் இன்று கன்னியாகுமரியில் ரோடு ஷோவில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோ மூலம் அவர் வாக்கு சேகரிப்பார் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Vijay Meeting: விஜய் கூட்டம் ரத்து
விஜய் இன்று கன்னியாகுமரியில் பொதுக்கூட்டத்தில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது
-
தொண்டர் வீட்டுக்கு விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்
தொண்டர் வீட்டுக்கு விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்
எப்படி இருக்கு #DravidianModel ஆட்சி?
மக்களே எடைபோட்டுச் சொல்லும் பதில்கள் இந்த வீடியோவில்:#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK pic.twitter.com/WYbB4PD3c3
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 12, 2026
-
பல கோடிகள் என்னிடம் இல்லை – சீமான்
நான் வெறும் முகத்தை மட்டும் காண்பித்து உங்களிடம் ஓட்டு கேட்கவில்லை. நல்ல நல்ல கருத்துக்களை சொல்லி வாக்கு கேட்டு வருகிறேன். இதே போல, நான் பல கோடிகளை கொட்டி அரசியல் செய்ய வந்தவன் கிடையாது. உயர்ந்த கொள்கைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வந்தவன் – சீமான்
-
Seeman Speech : சீமான் உருக்கமான பேச்சு
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் நான் போட்டியிட்ட 4 தேர்தல்களில் பணம் இல்லாத காரணத்தால் தோல்வியை சந்தித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக பேசினார்.
-
அருகில் உள்ள வீடுகளில் பூத் சிலிப்புகள்
வாக்குச்சாவடி அலுவலர்கள் பூத் சிலிப் விநியோகம் செய்ய வரும்போது, வீட்டில் வாக்காளர்கள் இல்லையெனில், அருகில் உள்ள வீடுகளில் தங்களுக்கான பூத் சிலிப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
என்னென்ன இருக்கும்?
அதில் அவர்களின் பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி எண்ணை எளிதில் அடையாளம் காணும் வகையில் கட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த ‘பூத் சிலிப்பில்’ ‘கியூ ஆர் கோடும்’ உள்ளது. இதன்மூலம் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
-
புதிய வகை அடையாளச் சீட்டுகள்
வாக்காளர்களுக்கு அடையாள சீட்டுகளை (பூத் சிலிப்) வழங்க பி.எல்.ஓ. அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தேர்தலுக்காக புதிய வகை அடையாளச் சீட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன.
-
பி.எல்.ஓ. அலுவலர்கள் ஈடுபடுவார்கள்
பி.எல்.ஓ. அலுவலர்கள் வீடுவீடாக சென்று இவற்றை வழங்குவார்கள். அவர்கள் தனித்தனியாகச் சென்று இந்த ‘பூத் சிலிப்புகளை’ வாக்காளர்களுக்கு வழங்கலாம்.
-
Booth slips : ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று முதல்
தமிழகம் முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று முதல் தொடக்கம்
Published On - Apr 12,2026 9:57 AM