Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெக தலைவர் விஜயுடன் இணையும் ஓபிஎஸ்..? அவரே சொன்ன தகவல்…

OPS announces: அதிமுக உரிமை மீட்புக் குழு மாநில மாநாடு 2025 செப்டம்பர் 4-ல் மதுரையில் நடக்கிறது. இபிஎஸ் ஒத்துழைத்தால் நிபந்தனை இன்றி அதிமுகவுடன் இணைவேன் என ஓபிஎஸ், தெரிவித்தார். மாநாட்டுக்கு சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்ற அவர் விஜய்யின் அரசியல் ஜனநாயகத் தன்மையைக் கருத்தில் கொண்டு தார்மீக ஆதரவு வழங்கப்படும் என கூறினார்.

தவெக தலைவர் விஜயுடன் இணையும் ஓபிஎஸ்..? அவரே சொன்ன தகவல்…
ஓ.பன்னீர்செல்வம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Jul 2025 07:21 AM

சென்னை ஜூலை 15: அண்ணா திராவிட முன்னேற்ற கழக உரிமை மீட்புக் குழுவின் (Anna Dravida Munnetra Kazhagam Rights Recovery Committee)  மாநில மாநாடு 2025 (State Convention 2025) செப்டம்பரில் 4-ல் மதுரையில் (Madurai) நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் மாநாடாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. மாநாட்டுக்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்படும். மாநாட்டுக்கு முன்னதாக மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கும்பட்சத்தில் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவுடன் இணைவதாக ஓபிஎஸ், தெரிவித்தார். விஜய்யின் அரசியல் ஜனநாயகத் தன்மையைக் கருத்தில் கொண்டு தார்மீக ஆதரவு வழங்கப்படும் எனவும் கூறினார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு வரும் 2025 செப்டம்பர் 4-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என முன்னாள் முதல்வரும், குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இந்த மாநாடு, அதிமுக தொண்டர்களின் எதிர்கால திசையை முடிவு செய்யும் வரலாற்று நிகழ்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூலை 20-ல் முதல் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்

இது தொடர்பான மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையின் வேப்பேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆலோசகராக பண்ருட்டி எஸ். ராமசந்திரன் தலைமை வகித்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் குழுவின் எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. மாநில மாநாட்டுக்கு முன்னதாக, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் என்றும், அதன் தொடக்கமாக காஞ்சிபுரத்தில் 2025 ஜூலை 20 அன்று முதல் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Also Read: அஜித்குமாரின் தம்பிக்கு மதுரை ஆவினில் வேலை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு நேரடி அழைப்பு விடுக்கப்படும்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “அதிமுகவின் உரிமையை மீட்டெடுக்கும் விதமாக சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கான அடுத்த கட்டமாக மதுரையில் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அதிமுகவே எங்கள் உயிர்நாடி. இதன் மீட்சி நோக்கில், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு நேரடி அழைப்பு விடுக்கப்படும். இபிஎஸ் ஒப்புக்கொண்டால் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவுடன் இணையும் தயார்நிலையில் உள்ளேன். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை; என்னுடன் இருப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும்,” என கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கு. வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மாநிலங்களவை உறுப்பினர் மு.தாமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பாஜக கூட்டணியில் தற்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணி அடுத்தாண்டு தேர்தலில் போட்டியிடும் என அமித் ஷா ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு அளிக்க தயார்… ஓபிஎஸ் தகவல்

அத்துடன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், “விஜய் தற்போது சரியான முறையில் நடந்து வருகிறார். அவர் ஜனநாயக முறையில் செயல்பட்டால், நாங்கள் அவருக்கு தார்மீக ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்,” என்றும் கூறினார்.