” அஜித், ரஜினி வந்தால் இதை விட கூட்டம் வரும்” – விஜயின் பிரச்சாரம் குறித்து சீமான் கருத்து..
Seeman: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்நிலையில், அஜித், ரஜினி வந்தால் இதைவிட அதிக கூட்டம் வரும் என சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை, செப்டம்பர் 14, 2025: விஜயின் பிரச்சாரம் குறித்து பதில் அளித்த நாம் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நடிகர் அஜித், நடிகர் ரஜினிகாந்த் அல்லது நயன்தாரா வந்தாலும் கூட, இதைவிட அதிக கூட்டம் இருக்கும்” என தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 அன்று தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் நாளிலேயே திருச்சியில் தனது பரப்புரையை ஆரம்பித்து, ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
த.வெ.க தலைவர் விஜயின் பிரச்சார பயணம்:
முதல் நாளான நேற்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், திருச்சி விமான நிலையத்தை அடைந்தவுடன், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்ததால், அவரது பிரச்சார வாகனம் மிகவும் மெதுவாக நகர்ந்தது. ஆறு கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு சுமார் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டது. பின்னர், திருச்சி மரக்கடையில் அவர் மக்களிடம் உரையாற்றினார்.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. 5 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் திருச்சியிலிருந்து அரியலூர் நோக்கிப் புறப்பட்டார். சுமார் நான்கு மணி நேரப் பயணத்திற்கு பின் அரியலூரை சென்றடைந்த அவர், அங்கு தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
பின்னர் அங்கிருந்து பெரம்பலூர் நோக்கிப் பயணம் தொடங்கினார். ஆனால், லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்ததால் பெரம்பலூருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் பிரச்சார வாகனம் அதே இடத்தில் நின்றபடியே இருந்தது. இதன் காரணமாக, பெரம்பலூர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்க: அலர்ட் மக்களே… வரப்போகும் அடுத்தடுத்து 2 புயல்கள்.. வெதர்மேன் சொன்ன தகவல்!
அஜித் வந்தால் இதை விட கூட்டம் அதிகமாக இருக்கும் – சீமான்:
மக்களின் காயங்கள் மனதில் இருந்தால் அது மொழியாக வரும் . ஐயா ஸ்டாலின் , ஐயா எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜய் இவர்கள் மூவரும் பேப்பரில் எழுதி வைத்து படிப்பவர்கள் .
2026 தேர்தல் என்னைச் சுற்றி தான் இருக்கும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் pic.twitter.com/opS8JQSxgZ— NTK IT Wing (@_ITWingNTK) September 14, 2025
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரம், அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பேசப்பொருளாகவும் மாறியுள்ளது. இதே சூழலில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விஜயின் பிரச்சாரம் குறித்து கோவை விமான நிலையத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். நடிகர் ரஜினி, அஜித் அல்லது நயன்தாரா வந்தாலும், விஜய்க்கு வரும் கூட்டத்தை விட அதிக கூட்டம் வரும். ஆனால் கூட்டத்தைப் பார்க்க வேண்டாம்; அவர்கள் முன்வைக்கும் கொள்கையைப் பார்க்க வேண்டும். இங்கு இருப்பவர்கள் யாராவது கொள்கையைப் பார்க்கிறார்களா?” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.