திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் குறி வைக்கும் 15 தொகுதிகள்..லிஸ்ட் தயார் செய்த கமலஹாசன்..!

Makkal Needhi Maiam: வரும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழக தலைமையிடம் மக்கள் நீதி மய்யம் 2 இலக்க தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான பட்டியலை தயார் செய்த நிலையில், திமுக தலைமையிடம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் குறி வைக்கும் 15 தொகுதிகள்..லிஸ்ட் தயார் செய்த கமலஹாசன்..!

திமுகவிடன் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்க்கும் தொகுதிகள்

Published: 

25 Jan 2026 08:29 AM

 IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றியை வசப்படுத்துவதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றது. அந்த வகையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் கிட்டத்தட்ட கூட்டணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தெரிகிறது. இதேபோல, திமுக கூட்டணியில் உள்ள அந்த கட்சிகள் அதே கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்த இரு கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு விவகாரங்களை எழுப்பத் தொடங்கியுள்ளன. இதில், அதிகமாக தொகுதி பங்கீடு குரல் கேட்பது திமுக கூட்டணியில் தான் என்று சொல்லலாம்.

தொகுதி பங்கீடு குரலை எழுப்பும் கட்சிகள்

ஏனென்றால், அந்த கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை கூடுதலாக கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் தற்போது மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை ( ஜனவரி 24) நடைபெற்றது.

மேலும் படிக்க: இன்று தவெக செயல்வீரர்கள் கூட்டம்.. முக்கிய முடிவெடுக்கும் விஜய்?

திமுகவிடம் 15 தொகுதிகளை குறி வைக்கும் மநீம

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமை வகித்து கட்சியினருடன் கலந்தாலோசித்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தலைமையிடம் எத்தனை தொகுதிகளை பெற வேண்டும், எந்தெந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பன உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், திமுக தலைமையிடம் சுமார் 15 சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மநீம தேர்வு செய்துள்ள 15 சட்டமன்ற தொகுதிகள்

இதில், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, வேளச்சேரி, சிங்காநல்லூர், மதுரவாயல், மயிலாப்பூர், தாம்பரம், அம்பத்தூர், கவுண்டம்பாளையம், சோளிங்கநல்லூர், திருச்சி கிழக்கு, ஆலந்தூர், மதுரை மத்தியம், ஸ்ரீரங்கம், மதுரை கிழக்கு ஆகிய 15 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்துக்கு வெற்றி வாய்ப்பு சாத்தியமாக இருப்பதாகவும், இந்த தொகுதிகளை திமுக தலைமையிடம் கட்டாயம் கேட்டு வாங்க வேண்டும் எனவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தொகுதிகள் குறித்த பட்டியலையும் மக்கள் நீதி மய்யம் தயார் செய்துள்ள நிலையில், தகுந்த நேரத்தில் திமுக தலைமையிடம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…2-ஆவது முறையாக அமித் ஷா தமிழகம் வருகை…முக்கிய ஆலோசனை!

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?