மதுரை தெற்கு தொகுதி.. கள நிலவரம் என்ன? மக்கள் ஆதரவு யாருக்கு? விவரம் இதோ..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், 23ஆம் தேதியுடன் தேர்தல் பரப்புரை பொதுவாக நிறைவடைகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
ஏப்ரல் 21, 2026: மதுரை தெற்கு தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதனும், அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் இராமசீனிவாசனும் களத்தில் நிற்கின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், 23ஆம் தேதியுடன் தேர்தல் பரப்புரை பொதுவாக நிறைவடைகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பாக, இந்த தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்றும், திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மதுரை தெற்கு தொகுதியில் கள நிலவரம் என்ன என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
மதுரை தெற்கு தொகுதியின் நிலவரம் என்ன?
பூமிநாதனைப் பொறுத்தவரையில், மதுரை தெற்கு தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான மக்கள் நலப் பணிகளை தொகுதியில் செயல்படுத்தியுள்ளார் என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா பெற்றுத்தந்துள்ளார். நீண்டநாள் அரசியல் அனுபவம் கொண்ட பூமிநாதன், பரப்புரையிலும் முன்னிலையில் உள்ளார். இதனால் பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.
மேலும் படிக்க: 2026 தேர்தல் களம்: நோட்டா வாக்குகளை தட்டிப்பறிக்குமா விஜய்யின் தவெக?
மதுரை தெற்கு தொகுதியில் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த மகாலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு, அவரும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இறுதி நேரத்தில் இராமசீனிவாசன் போட்டியில் நிறுத்தப்பட்டிருப்பது செளராஷ்டிரா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் ஒன்று கூடி செளராஷ்டிரா வேட்பாளருக்கே வாக்கு அளிப்போம் என முடிவு செய்திருப்பதும், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் சார்பிலும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவது இராமசீனிவாசனுக்கு பின்னடைவாக உள்ளது.
அதுபோல், பூமிநாதன் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புவதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளது. தொகுதி மக்களின் ஆதரவு மற்றும் உள்ளூர் வேட்பாளர் என்ற பலத்தால், மதிமுக வேட்பாளர் பூமிநாதன் இந்த முறை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர்.