தேர்தலில் போட்டியிட கட்சிகள் எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன!
How Political Parties Choose Candidates | தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், கட்சிகள் எவ்வாறு தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தமிழகத்தில் (Tamil Nadu) விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Assembly Election) நடைபெற உள்ளது. ஏப்ரல் 23, 2026 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. திராவிர முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகள் வலுவான கூட்டணியுடன் களமிறங்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தனித்து களம் காணுகின்றன. கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்த சில கட்சிகள் வேடாளர்களை அறிவித்து பிரசாரத்தில் இறங்கிவிட்டன. இருப்பினும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களுக்கான நேர்முக தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், கட்சிகள் எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் எவ்வளவு முக்கியம்?
ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது என்றால், தமிழகத்தில் உள்ள மொத்த 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்தோ அல்லது கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இத்தகைய சூழலில் ஒவ்வொரு வேட்பாளரும் அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தர வேண்டிய முக்கிய இடத்தில் இருப்பர். காரணம், ஒரு தொகுதி வித்தியாசத்தில் கூட அந்த கட்சி வெற்றி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்படலாம்.
இதையும் படிங்க : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை.. தேர்தலில் போட்டியில்லை.. கமல்ஹாசன் அதிரடி
கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வது எப்படி?
தொகுதி வாரியாக வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகள், அதற்காக சரியான வேட்பாளர்களை தேர்வு செய்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. உதாரணமாக, எந்த தொகுதியில் எந்த வேட்பாளருக்கு அதிக செல்வாக்கு உள்ளது, எந்த வேட்பாளருக்கு மக்கள் உடன் நெருங்கிய மற்றும் நேரடி தொடர்பு உள்ளது என்பதை ஆராய்ந்து தான் வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கட்சிகள், வேட்பாளருக்கு அந்த அடிப்படை தகுதி உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே வேட்பாளரை தேர்வு செய்யும்.
இதையும் படிங்க : அடுத்தக்கட்ட பரப்புரை.. சென்னை, செங்கலபட்டு, காஞ்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி.. அட்டவணை வெளியீடு
கட்சிகள் எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன என்பது தொடர்பான அடிப்படை விதிகள் எதுவும் இல்லை என்றாலும், பெரும்பாலான கட்சிகள் இவ்வாறு தான் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன.