மும்பையில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நபர், மக்களின் சோகங்களை, துயரங்களை கேட்கும் சேவையை, பணம் வசூலித்து செய்து வருகிறார். அவர் கடற்கரையில் நின்று, யாருக்காவது தங்கள் துக்கத்தை சொல்ல வேண்டும் என்றால், நான் கேட்க தயார் என்று ஒரு பதாகையை பிடித்திருந்தார். அவரின் கட்டண விவரம் குறித்து கேட்கும்போது, சிறிய பிரச்சனைகளுக்கு 250 ரூபாயும், பெரிய கவலைகளுக்கு 500 ரூபாயும், உட்கார்ந்து அழவேண்டும் என்றால் 1000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பிரித்விராஜ் போஹ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.