AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தோல்வி முகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் முக்கிய அமைச்சர்கள்.. தொடர் முன்னிலையில் தவெக.. கலங்கும் திமுகவினர்..

இதில் பெரும் ஆச்சர்யமாக திமுகவின் கோட்டையான சென்னையில் தவெக வசமாகியுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் தவெக கைப்பற்றி வருகிறது. இதன் காரணமாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபுவை விட பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தோல்வி முகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் முக்கிய அமைச்சர்கள்.. தொடர் முன்னிலையில் தவெக.. கலங்கும் திமுகவினர்..
திமுக அமைச்சர்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 May 2026 13:05 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவும் கடும் பின்னடைவை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக களம் கண்ட விஜய்யின் தவெக 105க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இதன் மூலம் மூன்று கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல் உள்ளது. இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவு இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் குழப்பமானதாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 Results LIVE: தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? முன்னிலையில் தவெக!

பொய்யான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக ஆட்சி அமைக்கும் என்றுமே கூறியிருந்தன. அதில், Axis my india நிறுவனம் வெளியிட்ட ஒரு கருத்துக்கணிப்பு மட்டுமே விஜய்யின் தவெக வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் அனைத்தும் யாரும் எதிர்பாராத வகையில், தவெகவுக்கு ஆதரவாக வந்துள்ளன. இன்று காலை தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, தவெக முன்னிலை வகித்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் முதல் திமுக அமைச்சர்கள் பின்னடைவு

இதில் பெரும் ஆச்சர்யமாக திமுகவின் கோட்டையான சென்னையில் தவெக வசமாகியுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் தவெக கைப்பற்றி வருகிறது. இதன் காரணமாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபுவை விட பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இதேபோல், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராஜ கண்ணப்பன், கீதா ஜீவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எ.வ வேலு, காந்தி, சக்கரபாணி, முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மதிவேந்தன், கோவி.செழியன், டி.ஆர்பி.ராஜா, காந்தி, சாமிநாதன், துரைமுருகன் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

இதையும் படிக்க: சரிந்தது திமுக கோட்டை: வெறிச்சோடிய அறிவாலயம்..பின்வாசல் வழியாக வெளியேறிய திமுக புள்ளிகள்!

38 சதவீத வாக்குகளை பெற்ற தவெக:

முதல்வர் மற்றும் அவரது முக்கிய முகங்கள் இருவரும் ஒரே நேரத்தில் பின்னடைவில் இருப்பது, திமுக ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சற்று ஆறுதலாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட திருவல்லிக்கேணி தொகுயில் மட்டும் அவர் முன்னிலை வகித்து வருகிறார். ஒட்டுமொத்தமாக திமுக 23.82% சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. அதேசமயம், தவெக 38.45% சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.

Follow Us