தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..
Edappadi Palanisamy: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியடைந்து தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் ஒற்றுமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது அமித்ஷா கூட்டணி ஆட்சி என தொடர்ந்து கூறிப்பிட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தற்போது தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி, ஜூலை 14, 2025: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் ஒற்றுமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களை இருக்கக்கூடிய நிலையில் திமுக மற்றும் அதிமுக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜூலை 7 2025 அன்று தொடங்கிய இந்த முதல் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஜூலை 21ஆம் தேதி நிறைவடைகிறது. முதல் கட்ட சுற்றுப்பயணத்தில் கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள 33 தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமியில் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்:
ஜூலை 21 2025 அன்று நிறைவடையும் சுற்றுப்பயணத்தை முடித்த பின்பு இரண்டு நாட்கள் ஓய்வெடுத்து அதனைத் தொடர்ந்து ஜூலை 24 2025 முதல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இரண்டாம் கட்ட பயணத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வரும் நிலையில் பாஜக தரப்பிலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக அளவு இடங்களில் வெற்றி பெற வேண்டும் என ஆயத்தமாக தயாராகி வருகின்றனர். அதற்காக பூத் கமிட்டி ஏஜெண்டுகள் அமைப்பது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாவட்டம் தோறும் சென்று மாநாடு நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி – அமித்ஷா:
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்குமா? என்ற கேள்விக்கு ஆம் என பதிலளித்துள்ளார். அதாவது அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த கருத்தை ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் படிக்க: நாளை தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..
தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி:
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியடைந்து தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் ஒற்றுமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது அமித்ஷா கூட்டணி ஆட்சி என தொடர்ந்து கூறிப்பிட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தற்போது தனித்து ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.. கூட்டணி குறித்து பேசிய டிடிவி தினகரன்!
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி ” உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதலமைச்சர். நாடகம் நடத்தி வருகிறார். மக்களின் செல்போன் எண்களை பெறுவதற்காக இதனை அரங்கேற்றி வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. திருபுவனம் அஜித் குமார் குடும்பத்திற்கு கொடுத்த நிவாரணத்தில் திருப்தி இல்லை என செய்திகள் வெளியாகி வருகிறது. அதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன் கோயிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட இருந்தது.
விசாரணை கைதி முருகன் உயிரிழப்பிற்கு நிவாரணம் வேண்டும்:
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 14, 2025
ஆனால் இதுவரையில் மீனாவுக்கு அரசு வேலையோ, எழுப்பி விடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் உங்கள் அரசால் உங்கள் காவல்துறையால் தனது கணவனை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண் 300 ரூபாய் கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார். மீனாவுக்கு உங்களிடமிருந்து பதில் வருமா என கேள்வி எழுப்பிய உள்ளார்