DMK Exit Poll Results: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!

DMK Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 : தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களிடம் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

DMK Exit Poll Results: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக

Updated On: 

29 Apr 2026 20:34 PM

 IST

தமிழகத்தில் விறு விறுப்பாக நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பாக வாக்களித்த பின்னர் வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) வெளியிட்டுள்ளன. இதில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், மு. க. ஸ்டாலின் 2- ஆவது முறையாக மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் அடிப்படையில் திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை பார்க்கலாம். இதில், சாணக்யா ஸ்டாட்டடிஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவில் திமுக கூட்டணி – 145 முதல் 160 தொகுதிகளிலும், பீப்பிள்ஸ் பல்ஸ் – 125 முதல் 145 தொகுதிகளிலும், என். டி. டி. வி. பீப்பிள்ஸ் பல்ஸ் – 125 முதல் 145 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகள் வரை

இதே போல, மேட்ரிக்ஸ் நிறுவனம் – 122 முதல் 132 தொகுதிகளிலும், ரிபப்ளிக் பி மார்க் – 125 முதல் 145 தொகுதிகளிலும், அக்னி நியூஸ் சர்வீஸ் – 169 தொகுதிகளிலும், பீப்புள் இன்சைட் – 120 முதல் 140 தொகுதிகளிலும், பீப்புள் பல்ஸ் – 125 முதல் 145 தொகுதிகளிலும், ஜே பி சி டைம்ஸ் நவ் – 75 முதல் 95 தொகுதிகளிலும், வோட்டு வைப் – 103 முதல் 113 தொகுதிகளிலும், சி.என்.என்.நியூஸ் 18 – 103 முதல் 113 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது.

மேலும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

10 தொகுதிகள் கூடுதலாக திமுக கூட்டணி வெற்றி பெறும்

தற்போது, வெளியான கருத்துக்கணிப்புகளில் அதிகபட்சமாக 103 முதல் 169 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் திமுக மற்றும் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் 18 இடங்களிலும், பிற கூட்டணி கட்சிகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

திமுக கூட்டணி 55.4 சதவீதம் வாக்கு வங்கி பெற வாய்ப்பு

இதில், திமுக கூட்டணி 45.4 சதவீதமும், திமுக மட்டும் 38 சதவீதமும் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது, வெளியான கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக கூட்டணி கூடுதலாக 10 சதவீதம் வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 55.4 சதவீத வாக்கு வங்கி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால், தமிழகத்தில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க: தவெக வேட்பாளர்களுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை.. பேசப்படும் விஷயங்கள் என்ன?

Follow Us
Related Stories
Puducherry Election Exit Poll Result: புதுச்சேரியில் மீண்டும் மலர்கிறது தேஜ கூட்டணி ஆட்சி.. முதல்வராகும் என்.ரங்கசாமி.. கருத்துக்கணிப்பில் தகவல்!
TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!
NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?
ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?
Assembly Election Exit Poll Result: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்.. வெற்றி யாருக்கு? வெளியான கருத்து கணிப்பு..
Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..