இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… யார்.. யார்.. எந்த தொகுதியில் போட்டி.. முழு விவரம்!

CPI Candidates : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டார். இதில், யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... யார்.. யார்.. எந்த தொகுதியில் போட்டி.. முழு விவரம்!

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Published: 

29 Mar 2026 14:33 PM

 IST

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்த கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார். இதில்,

மேலும் படிக்க: “ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க”.. உங்களை நம்பியே களத்தில் இறங்குகிறோம்.. விஜய் உருக்கமாக பேச்சு!!

  • தளி தொகுதியில் டி. ராமச்சந்திரன்.
  • திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து.
  • திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி.
  • பவானி சாகர் தொகுதியில் பி. எல். சுந்தரம்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மகாலிங்கம். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கூடுதல் தொகுதி- ஆட்சி அதிகாரத்தில் பங்கு

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்டதை விட வருகின்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தது. ஆனால், இதற்கு திமுக தலைமை செவி சாய்க்காமல் இருந்து வந்த நிலையில், தமிழகத்தில் கூட்டாட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

இதைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் சீட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 சட்டமன்ற தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 4 சட்டமன்ற தொகுதிகள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 10 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கட்சிகளின் வேட்பாளர்கள் விவரங்கள் வெளியீடு

இதைத் தொடர்ந்து, அந்தந்த கட்சிகள் தங்கள் போட்டியிடும் உத்தேச தொகுதிகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதே போல, உத்தேச வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. பின்னர், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர்கள் நாளை திங்கள்கிழமை ( மார்ச் 30) தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க: “2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்”.. தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

Follow Us
ரயில்வே கேட்டரிங்கு 10 லட்சம் அபராதம் .. ரயில்வே அதிரடி..
ஹோர்முஸ் கடல் பாதை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி - ஈரான் அறிவிப்பு
மெட்டா மற்றும் கூகுள் எதிராக பெண் தொடர்ந்த வழக்கு.. 6 மில்லியன் டாலர் பெண்ணுக்கு வழங்க உத்தரவு..
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு