சினிமாவில் உச்சத்தை விட்டு வந்திருக்கிறேன்.. விஜய் தலைவனே இல்லை – சரத்குமார் பரபரப்பு கருத்து
Sarathkumar criticizes Vijay: நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜகவில் தனது கட்சியை இணைத்து 2 ஆண்டுகளாகியும் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை, மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தை கேட்போம் என்று தெரிவித்தார்.

சரத்குமார் - விஜய்
சென்னை, மார்ச் 22 : நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 2024 ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைத்தார். இந்த நிலையில் பாஜகவில் இருந்து தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் தான் ஒதுக்கப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் மார்ச் 22, 2026 அன்று தனது ஆதரவாளர்களுடன் பேசிய சரத்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற எண்ணம் எனது ஆதரவாளர்களுக்கு இருந்தது. அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். தேர்தல் நேரத்தில் பொறுப்புகள் வழங்கப்படாததால் எங்களால் தேர்தல் பணிகளை செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார்.
மேலும் பேசிய அவர், ஏன் நீங்கள் சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் துவங்க கூடாது என என் ஆதரவாளர்கள் என்னிடம் கேட்டார்கள். இதனால் மாநில தலைவருக்கும் தேசிய தலைமைக்கும் எனது கோரிக்கைகளை கடிதமாக அளிக்கவிருக்கிறேன். நான் 1996 ஆம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் இயங்கி வருகிறேன். பிரதமர் மோடி பங்கேற்ற திருச்சி மாநாட்டில் எனது போட்டோ கூட இடம் பெறவில்லை என ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்தனர் என்றாரர்.
இதையும் படிக்க : விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? தொல்.திருமாவளவன் விளக்கம்
விஜய் குறித்து பரபரப்பு கருத்து
மேலும் பேசிய அவர், நான் யாருக்கும் பயந்தவன் இல்லை. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்தேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. பாஜகவிடம் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தை கேட்போம் என்றார். அப்போது, தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் குறித்து கேட்டபோது விஜய் ஒரு தலைவனே இல்லை. 41 பேர் உயிரிழந்தபோது அவர்களது வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்திருக்க வேண்டும் என்றார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக திமுக கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக சலசலப்புகள் நிலவி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தனர்.
இதையும் படிக்க : தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய தவெக? – தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு
இந்த நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தொகுதி தொங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தேசிய ஜனநாய கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மார்ச் 22, 2026 அன்று தமிழ்நாடு வரவிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த கட்சியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இந்த வார இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.