AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ரோஹித்துடன் தொடக்கம் யார்..? அசைக்க முடியாத மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்!

Mumbai Indians Strong Playing XI: மிடில் ஆர்டரில் களமிறங்கும் வில் ஜாக்ஸ் சமீபத்திய 2026 டி20 உலகக் கோப்பையில் 176.5 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 226 ரன்கள் குவித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆஃப்-ஸ்பின்னர் நமன் தீர் ஆகியோர் அடுத்ததாக களமிறங்கக்கூடிய பேட்ஸ்மேன்களாக இருக்கலாம். மும்பை அணி, நமன் தீரை ரூ. 5.25 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது.

IPL 2026: ரோஹித்துடன் தொடக்கம் யார்..? அசைக்க முடியாத மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்!
மும்பை இந்தியன்ஸ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Mar 2026 16:49 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ​​அனைவரின் பார்வையும் மும்பை இந்தியன்ஸ் மீதுதான் உள்ளது. ஏனென்றால், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2020-க்குப் பிறகு ஒருமுறை கூட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதில்லை. ஐபிஎல் 2025-ல், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று, தொடரிலிருந்து வெளியேறியது. அதன்படி, ஐபிஎல் 2026ல் இந்த முறை மும்பை எந்த ஆடும் லெவனைக் களமிறக்கும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான பிளேயிங் லெவன் விவரம் இதோ.

ALSO READ: சஞ்சு, ஆயுஷ் தொடக்கம்.. மிடில் ஆர்டரில் தோனியின் மிரட்டல் அடி.. வலுவான சிஎஸ்கே பிளேயிங் லெவன்!

ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வீரர் யார்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் ரோஹித் சர்மா, அந்த அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக இருப்பார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பிய குயின்டன் டி காக், ரோஹித்துடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கலாம். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் இருந்தால், பந்துவீச்சாளர்கள் அவர்களைச் சமாளிப்பது கடினமாக இருக்கும். அதனை தொடர்ந்து, 3வது மற்றும் 4வது இடத்தில் முறையே திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பேட்டிங் வாய்ப்புகள் வழங்கப்படலாம். இருப்பினும், டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில் திலக், மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டரில் களமிறங்கும் வில் ஜாக்ஸ் சமீபத்திய 2026 டி20 உலகக் கோப்பையில் 176.5 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 226 ரன்கள் குவித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆஃப்-ஸ்பின்னர் நமன் தீர் ஆகியோர் அடுத்ததாக களமிறங்கக்கூடிய பேட்ஸ்மேன்களாக இருக்கலாம். மும்பை அணி, நமன் தீரை ரூ. 5.25 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது. அவருக்குப் பிறகு மிட்செல் சான்ட்னர் களமிறங்கலாம் என்பதால், மும்பை அணிக்கு எட்டாவது இடம் வரை வலுவான பேட்டிங் ஆர்டர் உள்ளது.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு:

வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் நமன் தீர் ஆகிய 3 சுழற்பந்து வீச்சுத் தேர்வுகளாக இருப்பார்கள். ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் வேகப்பந்து வீச்சை மேற்கொள்ளும் நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இருப்பார்.

ALSO READ: ஸ்ட்ராங்கா? வீக்கா? ஆர்சிபி அணிக்கு காத்திருக்கும் சவால் இவைதான்!

மும்பை இந்தியன்ஸின் வலுவான பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட்

Follow Us