மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

Arvind Kejriwal to support MK Stalin: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன். அந்த வகையில் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 20, 2026 அன்று தமிழ்நாடு வந்துள்ளார்

மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவால் - மு.க.ஸ்டாலின்

Updated On: 

20 Apr 2026 22:15 PM

 IST

சென்னை, ஏப்ரல் 20: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பரப்புரை செய்வதற்காக தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசிய அரவி்ந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன். இதன் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 20, 2026 அன்று தமிழ்நாடு வந்துள்ளார்.

இதையும் படிக்க : கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் பறிமுதல் – பணத்தை பறித்த சென்ற கும்பலால் பரபரப்பு

இதனையடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். அவர் தமிழ்நாட்டுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார். அவர் எந்த வித ஈகோவும் இல்லாதவர். அதனால் தான் அவருக்காக நான் பரப்புரை செய்கிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

 

மேலும் பேசிய அவர், பாஜகவின் பிடியில் அதிமுக இருக்கிறது. பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை தான் அதிமுகவுக்கு ஏற்படும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பை இந்தியாவே கண்டது. கல்விக்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்று பேசினார்.

இதையும் படிக்க : பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக என இந்த சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகின்றன. கூடுதலாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணுகின்றனர். இதனால் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..