AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mannargudi Constituency Election 2026: விவசாய மக்களை அதிகம் கொண்ட மன்னார்குடி தொகுதி.. வெற்றி யாருக்கு? தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஒரு முக்கியமான தொகுதியாகும். மன்னார்குடி நகரத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்த தொகுதி, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி டெல்டா பகுதிக்குள் வரும் முக்கிய விவசாயத் தொகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த தொகுதி, நாகை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் பெரும்பாலும் கிராமப்புற மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். முக்கியமாக இங்கு விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Apr 2026 13:39 PM IST

1 / 6
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் 2021 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொண்டால், திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா சுமார் 87,072 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் சிவராஜ் மாணிக்கம் 49,779 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2 / 6
இந்த தொகுதி, திமுக வலுவாக இருக்கும் தொகுதியாகக் கருதப்படுகிறது. டெல்டா பகுதி என்பதால், நீர், விவசாயம், நலத்திட்டங்கள் போன்றவை முக்கிய தேர்தல் பிரச்சினைகளாக பார்க்கப்படுகின்றன. திமுக வலுவாக இருந்தாலும், இது திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவும் தொகுதியாகவும் உள்ளது.

3 / 6
இந்த தொகுதியில் மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சினைகள்: காவிரி நீர் விநியோகம், விவசாய நிவாரணங்கள், வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் (சாலை, குடிநீர்) ஆகியவை. இவை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளே முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

4 / 6
மேலும், இந்த தொகுதி வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் குடும்பத்துடன் தொடர்பு காரணமாக அரசியல் கவனம் பெற்றுள்ளது. பல்வேறு காலங்களில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வந்துள்ளது.

5 / 6
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தரப்பில் மீண்டும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரப்பில் காமராஜ், தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் ராஜாராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் பாரதி செல்வன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

6 / 6
Follow Us