புதுச்சேரியில் தேஜ கூட்டணி 60% வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும்… உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Union Home Minister Amit Shah: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 தொகுதிகளில் 24 தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், 60 சதவீத வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

புதுச்சேரியில் தேஜ கூட்டணி 60% வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும்... உள்துறை அமைச்சர் அமித் ஷா!

புதுச்சேரியில் தேஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்

Published: 

14 Feb 2026 13:57 PM

 IST

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் இன்று சனிக்கிழமை ( பிப்ரவரி 14) பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடர வேண்டும். உலகத்தின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் என்னால் இங்கு பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்றத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அதில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும், இண்டி கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்தெறிவதற்காகவும் நான் வந்துள்ளேன். புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு காலம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுள்ளது.

புதுச்சேரி அரசு சுயமாக செயல்படுகிறது

இதில், ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், முன்பு இருந்த காங்கிரஸ் அரசு புதுச்சேரியை அடிமையாக வைத்திருந்தது. ஆனால், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து புதுச்சேரி அரசை சுயமாக செயல்பட வைத்திருக்கிறது. 3- ஆவதாக புதுச்சேரியில் இஸ்திர தன்மையை அளித்துள்ளோம். கடந்த 2019- ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் 40 சி ஆர் பி எப் வீரர்கள் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அவர்களுக்கு நான் இந்த தருணத்தில் மரியாதை செலுத்துகிறேன்.

மேலும் படிக்க: தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை…இப்படியொரு வசதியா..பெரும் வரவேற்பு!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வந்து கொண்டிருந்தனர். இது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு வாடிக்கையாகவே இருந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு புல்வாமாவில் தாக்குதல் நடத்தியவர்களின் வீடு புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளை அளித்துள்ளனர்.

தேஜ கூட்டணி 60 சதவீத வாக்கு வங்கியை பெற வேண்டும்

இதில், 16 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி 24 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 60% வாக்கு வங்கியை பெற வேண்டும். முதல்வராக நாராயணசாமி இருந்தபோது மோசமான ஆட்சியை அளித்திருந்தார். அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதற்காக நாம் பயணிக்க இருக்கிறோம். புதுச்சேரியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கும். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் புதுச்சேரியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெக விருப்ப மனு வழங்க கால அவகாசம் நீட்டிப்பு..

Follow Us
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்