Tamil Nadu Election 2026 Results Live Streaming: தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை எங்கு, எப்போது பார்க்கலாம்?.. முழு விவரம்!!
Tamil Nadu, West Bengal, Kerala, Assam, Puducherry Assembly Election Results 2026 Online Live Streaming: இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுமார் 85% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன, இது ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் பங்கேற்பாகக் கருதப்படுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

மாதிரிப் புகைப்படம் (AI)
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ன் வாக்கு எண்ணிக்கை மே 4ல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவைத் தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த முடிவுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அதுவும் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த முறை விஜய்யின் அரசியல் வருகையால், தமிழக தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவு காணப்படுகிறது. அவ்வாறு, பரபரக்கும் இந்த தேர்தல் முடிவுகளை எங்கு பார்க்கலாம், தேர்தல் களம் எப்படியிருந்தது என்பது குறித்து விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.
தேர்தல் முடிவுகளை எங்கு, எப்படிப் பார்க்கலாம்?
வாக்கு எண்ணிக்கை மே.4 காலை 8.00 மணிக்கு, தபால் வாக்குகள் எண்ணுவதுடன் தொடங்கும். அப்போது முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான results.eci.gov.in மற்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளமான elections.tn.gov.in ஆகியவற்றில் தொகுதி வாரியான முன்னிலை மற்றும் முடிவுகளை நேரலையாகக் காணலாம். ‘Voter Helpline’ செயலி: கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் உள்ள இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் மொபைலிலேயே உடனுக்குடன் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக TV9 Tamilnews தளத்தில் காலை 6 மணி முதலே லைவ் அப்டேட்ஸ் தொடங்கும். அதில், தேர்தல் முடிவுகளை நீங்கள் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.
தேர்தல் களம்: நான்கு முனைப் போட்டி:
இந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாறு காணாத நான்கு முனை போட்டியாகப் பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி) – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் திமுக களம் கண்டது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் இந்தக் கூட்டணியில் நீடிக்கின்றன. அதிமுக கூட்டணி – எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பலமான கூட்டணியை அமைத்துள்ளது. இதில் பாமக, தேமுதிக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் – நடிகர் விஜய் தொடங்கியுள்ள இந்தப் புதிய கட்சி, இந்தத் தேர்தலின் மிகப்பெரிய “X factor”-ஆகக் கருதப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவுடன் விஜய் மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி – சீமான் தலைமையில் தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சி, தனது வாக்கு வங்கியை மேலும் உயர்த்தும் நோக்கில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளது.
தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு:
இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுமார் 85% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன, இது ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் பங்கேற்பாகக் கருதப்படுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். மு.க. ஸ்டாலின் (கொளத்தூர்), எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), விஜய் (தனது கட்சியின் முதல் தேர்தல் களம்) உள்ளிட்ட பல விஐபி வேட்பாளர்களின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்
வேட்பாளர் விவரம் அறிய
எதிர்பார்ப்புகள் மற்றும் கணிப்புகள்:
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) கலவையான முடிவுகளையே தந்தன. சில கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறினாலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பிரித்து, பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றன. அதிமுக தனது கோட்டைகளான கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் வலுவான போட்டியை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதிகரித்துள்ள வாக்கு சதவீதம் ஆட்சி மாற்றத்திற்கானதா” அல்லது “ஆதரவு அலைக்கானதா” என்பது விரைவில் தெரியவரும்.