வட்டி மட்டுமே ரூ.11 லட்சம்.. இந்த திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!

National Saving Certificate Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசின் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்து, திட்டத்தின் முடிவில் ரூ.36 லட்சம் பணம் பெறலாம்.

வட்டி மட்டுமே ரூ.11 லட்சம்.. இந்த திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Feb 2026 13:58 PM

 IST

சம்பாதிக்கும் பணத்தை வங்கி கணக்கிலோ அல்லது வீட்டிலோ சேமித்து வைப்பது பணத்தை வளர விடாமல் செய்யும் செயலாகும். எந்த வித உடல் உழைப்பும் இல்லாமல் பணத்தை பல மடங்கு வளர வைக்கும் திட்டங்கள் உள்ளன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பணம் பல மடங்கு உயர்வை சந்திக்கும். ஆனால், தாங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்குமா, நல்ல வருமானத்தை தருமா, எதிர்பாராத விதமாக ஏதேனும் நடந்துவிட்டால் தங்களது பணம் என்னவாகும் என பலருக்கும் குழப்பம் இருக்கும்.

இதன் காரணமாகவே பலரும் பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பர். ஆனால், மத்திய அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள எந்த கவலையும் இன்றி முதலீடு செய்து லாபம் பெறலாம். அது என்ன திட்டம், எப்படி முதலீடு செய்து லாபம் பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேசிய சேமிப்பு சான்றிதழ்

பொதுமக்களின் நலனுக்காக அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC – National Saving Certificate) திட்டம். இந்த திட்டம் அஞ்சலகங்கள் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் வழங்கப்படுவதால் இதில் சந்தை அபாயம் எதுவும் கிடையாது. எனவே இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முடிவில் நல்ல லாபத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : ஆதார் கார்டு மூலம் ரூ.50,000 வரை கடன் பெறலாம்.. அட இந்த திட்டம் குறித்து உங்களுக்கு தெரியாதா?

என்.எஸ்.சி திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

அஞ்சலகங்கள் மூலம் வழங்கப்படும் இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகை அதன் வட்டியுடன் சேர்த்து திட்டத்தின் முடிவில் வழங்கப்படும். உதாரணமாக இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.25 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் திட்டத்தின் முடிவில் ரூ.36.47 லட்சம் கிடைக்கும்.

இதையும் படிங்க : MIS : மாதம் ரூ.9,000 வட்டி மட்டும் கிடைக்கும்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

அதாவது இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் வட்டியாக மட்டுமே ரூ.11.47 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வரம்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்