உங்கள் குழந்தையின் கல்லூரி செலவுக்கு ரூ.1 கோடி உருவாக்க வேண்டுமா?.. இப்படி முதலீடு செய்யுங்கள்!
How To Create 1 Crore Rupees In SIP Investment | நிதி பாதுகாப்பை உருவாக்க சேமிப்பு அல்லது முதலீடு கட்டாயமானதாக உள்ளது. இந்த நிலையில், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற, ரூ.1 கோடி நிதியை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
நிதி பாதுகாப்பு வேண்டும் என நினைக்கும் அனைவரும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. சம்பாதிக்கும் பணத்தை மாதாந்திர செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தாமல், அதன் மூலம் நிதி பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்றால் இதனை கட்டாயம் செய்ய வேண்டும். நிதி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொண்ட பெற்றோர்கள் பலர், தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் நிதி பாதுகாப்பு மிகுந்ததாக இருக்க வேண்டும் என அவர்கள் சிறு வயதில் இருக்கும்போதே அவர்கள் பெயரில் முதலீடு செய்ய தொடங்குகின்றனர். ஆனால், பெரும்பாலான பெற்றோருக்கு எவ்வாறு சிறந்த முறையில் முதலீடு செய்து நிதி பாதுகாப்பு பெறுவது என தெரியாமல் உள்ளது. இந்த நிலையில், முதலீடு செய்து பிள்ளைகள் கல்லூரிக்கு செல்லும்போது ரூ.1 கோடி பணத்துடன் செல்லக்கூடிய அசத்தல் முறையீடு திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
எஸ்ஐபி முறையில் மியூச்சுசல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய தொடங்குங்கள்
காம்பவுண்டிங் முறையில் உங்களுடைய முதலீட்டை பல மடங்காக உயர்த்த எஸ்ஐபி (SIP – Systematic Investment Fund) முதலீடுகள் தான் உதவியாக உள்ளன. என்வே உங்கள் குழந்தையின் கல்லூரி படிப்புக்காக முதலீடு செய்கிறீர்கள் என்றால் குழந்தை பிறந்த ஆண்டு முதலே மாதம் தோறும் ரூ.15,000 என எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய தொடங்க வேண்டும். இவ்வாறு அடுத்த 18 ஆண்டுகள் வரை முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பொதுவாக எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக காலம் முதலீடு செய்தால் மட்டுமே சிறந்த லாபத்தை பெற முடியும். எனவே நீண்ட காலம் எந்த வித தடையுமின்றி முதலீடு செய்வதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : மிகப்பெரிய விலை உயர்வுக்கு தயாராகி வரும் தங்கம்.. நிபுணர்களின் ஷாக் கணிப்பு!
18 ஆண்டுகளில் முதலீடு ரூ.1 கோடியாக வளர்ந்து நிற்கும்
ஆண்டுக்கு சுமார் 12 சதவீதம் லாபம் தரக்கூடிய திட்டத்தில் நீங்கள் மாதம் தோறும் ரூ.15,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், 18 ஆண்டுகள் முடிவடையும் போது மொத்தமாக ரூ.32,40,000 முதலீடு செய்திருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டுக்கும் 12 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில், 18 ஆண்டுகளில் வட்டியாக மட்டுமே மொத்தம் ரூ.74,35,000 கிடைக்கும். அதன்படி முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து உங்கள் பிள்ளையின் கல்லூரி செலவுக்கு ரூ.1 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.