இந்தியா முழுவதும் கடும் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் மிக அதிக வெப்பமான நகரங்களின் பட்டியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி உலகின் முதல் 20 அதிக வெப்பமான நகரங்களில் 19 நகரங்கள் இந்தியாவிலேயே உள்ளன. பீகார் மாநிலத்தின் பகல்பூர், ஒடிசாவின் தால்சர் மற்றும் மேற்கு வங்கத்தின் அசன்சோல் ஆகிய நகரங்களில் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், பல நகரங்களில் 43 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.