ஒரு கிரெடிட் கார்டை குளோஸ் செய்ய வங்கி தாமதம் செய்ததால், ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.3.21 லட்சம் இழப்பீடு ஏற்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வெளியான தகவலின்படி, அந்த வாடிக்கையாளர் 2025 மே மாதத்தில் தனது இரண்டு கிரெடிட் கார்டுகளை குளோஸ் செய்ய கோரிக்கை வைத்தார். வங்கி அவரது கிரெடிட் லிமிட்டை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.10,000 ஆக குறைத்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வங்கி அவரது கோரிக்கையை செயல்படுத்தாமல், கார்டுகளை மூடவில்லை. அதற்கு பதிலாக ஆண்டுக் கட்டணம் வசூலித்தது. தொடர்ந்து பல முறை மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல் அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.