தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?.. 2026 அட்சட திருதியை விற்பனை சொல்வது என்ன?
Gold Investment Method Changed | இந்திய பொதுமக்கள் மத்தியில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக உள்ளது. இதன் கரணமாக பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக அட்சய திருதியை உள்ளிட்ட தினங்களில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வர். அதேபோல இந்த ஆண்டும் மக்கள் தங்கம் வாங்கிய நிலையில், அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மாதிரி புகைப்படம்
அட்சய திருதியை அன்று தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) வாங்குவதை பொதுமக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அன்றைய தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது செல்வத்தை பெருக செய்யும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 19, 2026) அட்சய திருதியை கடைபிடிக்கப்பட்டது. வழக்கம் போல இந்த ஆண்டும் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், பொதுமக்கள் நகை வாங்குவதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போர் காரணமாக நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்கம்
உலக சூழல் தங்கத்தின் விலை மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக தங்கத்தின் தேவை, புவிசார பதற்றங்கள் ஆகியவை தங்கத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாக உள்ளன. அந்த வகையில், கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் ஈரான் போர் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதற்கு முன்பு இருந்த புவிசார் பதற்றங்கங்களும் தங்கத்தின் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்தின. இவற்றின் காரணமாக தங்கம் தற்போது உச்சத்தில் உள்ளது.
இதையும் படிங்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – ஊதியம் எவ்வளவு உயரும்?
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.60,000 வரை மெல்ல மெல்ல உயர்ந்து வந்த தங்கம் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அபார விலை உயர்வை அடைந்தது. இவ்வாறு தங்கம் கடும் உச்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், பொதுமக்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது என்பது எட்டா கனியாக மாறியுள்ளது.
தங்கம் வாங்கும் முறையில் ஏற்பட்ட மாற்றம்
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று பொதுமக்கள் தங்கம் வாங்குவர். அந்த வகையில், இந்த ஆண்டும் ஏராளமான மக்கள் தங்கம் வாங்கியுள்ளனர். ஆனால், முன்பை போல இல்லாமல் இந்த ஆண்டு பொதுமக்கள் சற்று வித்தியாசமான முறையில் தங்கம் வாங்கியுள்ளனர். அதாவது அதிக எடை கொண்ட தங்க நகைகளுக்கு பதிலாக குறைந்த எடை கொண்ட நகைகள், தங்க நாணயங்கள் என தங்கம் விலையில் நீடிக்கும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு அவர்கள் முதலீடு செய்துள்ளனர்.