Personal Loan vs Payday Loan : இரண்டுக்கும் இடையே உள்ள 5 முக்கிய வேறுபாடுகள்
Personal Loan vs Payday Loan : இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பெர்சனல் லோன் மற்றும் பேடே லோன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த கட்டுரையில் பெர்சனல் லோனுக்கும் பேடே லோனுக்கும் இடையே உள்ள 5 வித்தியாசங்களைப் பார்க்கலாம்.

நமது வாழ்க்கையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்போதோ அல்லது குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற நாம் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது போன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலானோர் பர்சனல் லோன் (Personal Loan) அல்லது பேடே லோன் (Payday Loan) என இரு முறையில் கடன் பெற விரும்புகின்றனர். இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக கடனுக்கான, நிபந்தனைகள் கால அளவு, வட்டி போன்றவை வெகுவாக மாறுபடும். நாம் என்ன தேவைகளுக்காக கடன் வாங்குகிறோம், நம் பொருளாதார சூழ்நிலை என்ன என்பது குறித்து முடிவு செய்து நம் பெறும் கடனை தேர்வு செய்துகொள்ளலாம். என்டிடிவி பிராஃபிட் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் பெர்சனல் லோன் மற்றும் பேடே லோனுக்கும் உள்ள 5 முக்கியமானவேறுபாடுகளை பார்க்கலாம்.
1. கடனின் நோக்கம்
பர்சனல் லோன் என்பது திருமணம், சுற்றுலா, கல்விச் செலவுகள் போன்ற திட்டமிடப்பட்ட பெரிய செலவுகளுக்காக வழங்கப்படும். இதனை வங்கிகள் அல்லது நம்பகமான நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. பேடே லோன் என்பது முக்கியமாக மருத்துவ செலவுகள், வீட்டு வாடகை, மாத இறுதி செலவுகள் என அவசர தேவைகளுக்காக போன்றவற்றுக்காக குறுகிய காலத்திற்கு வழங்கப்படும். இதனை பெரும்பாலும் குறிப்பிட்ட சில வங்கிகள் அல்லது ஆன்லைன் தளங்கள் வழங்குகின்றன.
2. கடன் பெறுவதற்கான நிபந்தனைகள்
பர்சனல் லோன் பெற கடன் பெறுவோரின் கிரெடிட் ஸ்கோர், வருமான நிலை, பழைய கடன் வரலாறு போன்றவை பரிசீலிக்கப்படும்.
பேடே லோன் பெற, பொதுவாக அதிகமான பரிசோதனைகள் செய்யப்படாது. சம்பள விவரங்கள் அடங்கிய பே ஸ்லிப் (Pay Slip) மட்டும் சமர்பித்தால் போதுமானது.
3. வட்டி விகிதமும் கால அவகாசமும்
பர்சனல் லோனில், வட்டி விகிதம் ஒப்பீட்டளவில் சற்றே குறைவாக இருக்கும். மேலும், நம் தேவைக்கு ஏற்ப 1 ஆண்டு முதல் 5 அல்லது 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படும். ஆனால் பேடே லோன் அதிக வட்டி விகிதத்துடன், 30 முதல் 60 நாட்கள் வரை மட்டுமே திருப்பிச் செலுத்தும் அவகாசம் இருக்கும்.
4. கடன் தொகை
பர்சனல் லோனில், ஒரு நபர் அவர் வருமானத்தைப் பொறுத்து 40 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். பேடே லோன் மூலம் ஒரு குறைந்த தொகையையே கடனாக பெற முடியும். அது சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும். மேலும், சில நேரங்களில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும்.
5. நிதி பாதுகாப்பு
பர்சனல் லோனை பொறுத்தவரை இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள் கடன் வழங்குவதால் அதனால் கடன் பெறுபவர்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் கிடைக்கும். பேடே லோன்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் குறைவு. இதனால் அதிகபட்ச கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.
எது சிறந்தது?
உங்களுக்கு பெரிய தொகை தேவைப்படுகிறது என்றால் பெர்சனல் லோன் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் பாதுகாப்பும் கிடைக்கும். திடீர் அவசர செலவுகள் ஏற்பட்டால் தவிர்க்க முடியா பட்சத்தில் பேடே லோன் உதவிகரமானதாக இருக்கும். மேலும் அதில் மறைமுக கட்டணங்கள், அதிக வட்டி விகிதங்ள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.