பழைய கார் வாங்க கடன் கிடைக்குமா? எப்படி விண்ணப்பிப்பது?
Used Car Loans : இந்தியாவில் பழைய கார் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பழைய கார் வாங்க வேண்டும் என்றால் நல்ல காருக்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த நிலையில் சில வங்கிகள் பழைய காருக்கு கடன் வழங்குகின்றன. அவற்றை பெறுவது எப்படி போன்ற விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கார் (Car) வாங்குவது என்பது, நம் வாழ்க்கையின் முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும். ஆனால் புதிய கார் வாங்குவது நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டமுடியாத கனவாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒரு குடும்பத்தில் குறைந்தது 4 பேர் என்றால் அந்த 4 பேரும் பயணிக்கும் வகையில் கார் வாங்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய செலவாகும். அந்த வகையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவது சிறந்த மாற்று விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில், தேவையான பணம் இல்லாத நேரங்களில், பழைய கார் கடன் (Used Car Loan) மூலம் நம் கனவுகளை நிஜமாக்கி கொள்ள முடியும். இப்பொழுது வங்கிகள் புதிய கார்களுக்கு லோன் வழங்குவது போல பழைய கார்களுக்கு லோன் வழங்கி வருகின்றன. பழைய காருக்கு லோன் எப்படி வாங்குவது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரவாக பார்க்கலாம்.
பழைய கார் கடன் என்றால் என்ன?
பழைய கார் கடன் என்பது, நீங்கள் ஏற்கனவே வேறொருவரால் பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவதற்காக எளிதில் பெறக்கூடிய கடன் வசதி. இதில், காரின் மதிப்பின் ஒரு பகுதி அல்லது முழு தொகையும் கடனாக வழங்கப்படுகிறது. புதிய காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பது போலவே, அதற்கென பிரத்யேக கடன் தொகை, வட்டி விகிதம் போன்றவைகள் நிர்ணயிக்கப்படும். இந்தியாவில் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், பல்வேறு விதமான பழைய கார் கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களை கீழே பார்க்கலாம்.
எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank)
இந்த வங்கியில் பழைய கார்களுக்கு அதன் மதிப்புக்கு ஏற்ப ரூ. 2.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. பழைய காரின் மதிப்புக்கு ஏற்ப முழு தொகையும் கடனாக பெறலாம். வட்டி விகிதம் ஆண்டுக்கு 11.50 சதவிகிதம் முதல் 17.50 சதவிகிம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank Of India)
இந்த வங்கியில் பழைய கார்களுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் பழைய கார் கடனுக்கு ஆண்டுக்கு 11.75 சதவிகிதம் முதல் 15.25 சதவிகிதம் வரை வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
இந்த வங்கியில் பழைய காரின் விலைக்கு 100 சதவிகிதம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் பழைய கார்களுக்கு ஆண்டுக்கு 11.25 சதவிகிதம் வரை வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கடனுக்கு ஏற்ப 12 மாதங்கள் முதல் 84 ஆண்டுகள் வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
இந்த பேங்கில் பழைய கார்களுக்கு அதன் மதிப்புக்கு ஏற்ப 100 சதவிகிதம் கடன் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு 13.55 சதவிகிதம் முதல் 15.80 சதவிகிதம் வரை வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் கிரெடிட் (TVS Credit)
பழைய கார்களின் மதிப்புக்கு ஏற்ப 95 சதவிகிதம் வரை கடன் வழங்கப்படும். இதற்காக வருமான ஆதாரம் சமர்பிக்க தேவையில்லை. மேலும் இதில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 13 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (Sriram Finance)
இந்த நிதி நிறுவனத்தில் பழைய கார்களுக்கு அதன் மதிப்புக்கு ஏற்ப 85 சதவிகிதம் வரை கார் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக வருமான ஆதாரம் சமர்பிக்க தேவையில்லை. இந்த வங்கியில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10 சதவிகிதம் முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரின் மதிப்புக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும். கடன் வாங்கிய 48 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
பழைய காருக்காக பெர்சனல் லோன் வாங்கலாமா?
நீங்கள் ஒரு கார் மட்டும் இல்லாமல் பிற செலவுகளையும் ஒரே கடனில் மேனேஜ் செய்ய விரும்பினால், பெர்சனல் லோன் ஒரு நல்ல மாற்றாக இருக்கலாம். ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம், வட்டி விகிதம் 10.5% முதல் தொடங்குகிறது. ஆனாலும், இது ஒரு குறிப்பிட்ட தேவைக்காக வங்கப்படாத லோன் என்பதால், வட்டி மற்றும் தவணை தொகை சிறிது அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
Eligibility – யாருக்கு கடன் கிடைக்கும்?
இந்த கார் லோன் வாங்குபவர்கள் 21 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். உங்களிடம் நிலையான வருமானம் இருக்க வேண்டும். சிபில் ஸ்கோர் 700க்கு மேல் இருக்க வேண்டும். ஏற்கனவே வாங்கிய கடனை திரும்ப சரியாக செலுத்தியிருக்க வேண்டும்.
பழைய கார் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- வட்டி விகிதங்கள், கால அவகாசம், கூடுதல் கட்டணங்கள் போன்றவை பல நிறுவனங்களில் எப்படி இருக்கின்றன என ஒப்பீடு செய்யுங்கள்.
- காரின் மதிப்பீடு தேவையா, கடன் தொகை எவ்வளவு, திருப்பி செலுத்தும் கால அளவு ஆகியவற்றை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
- ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணம், வயது விவரம், பே ஸ்லிப், தேவைப்பட்டால் வாகனத்தின் ஆர்சி மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவை சமர்பிக்க வேண்டும்.
- ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
- உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, காரை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்ப கடன் அளிக்கும்.