என்பிஎஸ் பயனர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்படும் ஓய்வூதியம்!
National Pension Scheme Will Increase | தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், அதனை ரூ.7,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS – National Pension Scheme) கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஊழியர்கள் ரூ.1,000 மட்டுமே ஓய்வூதியமாக பெற்று வந்த நிலையில், அது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் ஓய்வூதியத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது குறித்து வெளியான முக்கிய தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
என்பிஸ் திட்டத்தில் வழங்கப்படும் மாதம் ரூ.1,000 ஓய்வூதியம்
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ரூ.1,000 ஓய்வூதியம் தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்றதாக இல்லை. இதன் காரணமாக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கோரிக்கைகளின் அடிப்படையில் ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
ரூ.7,500 ஆக உயர்த்தப்பட உள்ள பென்ஷன்
தற்போது ரூ.1,000 என்ற அளவில் என்பிஎஸ் திட்டத்தில் பென்ஷன் வழங்கப்படும் நிலையில், அதனை ரூ.7,500 ஆக உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பான நாடாளுமன்ற ஓய்வூதிய குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் குறைந்த வட்டி எதற்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
என்பிஎஸ் திட்டத்தில் பென்ஷன் வழங்கப்படுவது எப்படி?
தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது இந்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சந்தை சார்ந்த தன்னார்வ ஓவூதிய சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுடைய இந்திய குடிமக்கள் தாங்கள் பணிபுரியும் காலத்தில் முதலீடு செய்து, பிறகு அவர்கள் தங்களது 60 வயதிற்கு பிறகு வழக்கமான மாத ஊதியம் மற்றும் வரிச் சலுகைகள் பெற இது உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.