இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி அவசியம் இல்லை.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்!
No Need OTP For These Payments | பொதுமக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India), டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் (Digital Payment Methods) பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இந்த விதி பொருந்தும். இந்த நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி இந்த பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி தேவையில்லை – ஆர்பிஐ
அதாவது குறிப்பிட்ட வரம்பு வரையிலான பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு இனி ஓடிபி அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. வழக்கமாக மின்சார கட்டணம், டிடிஎச் ரீச்சார்ஜ், மொபைல் ரீச்சார்ஜ், ஜிம் சப்ஸ்கிரிப்ஷன், நெட்பிளிக்ஸ் ஓடிடி சப்ஸ்ரிப்ஷன், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி போன்ற பரிவர்த்தனைகளுக்கு ஆட்டோ பேமெண்ட் எனப்படும் தானாகவே பணத்தை எடுத்துக்கொள்ளும் அம்சத்தை வைத்திருப்போம்.
இதையும் படிங்க : 63-ல் இருந்து ரூ.116 அமெரிக்க டாலர்களாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. மத்திய அமைச்சகம் வெளியிட்ட தரவு!
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் இந்த சேவைகளுக்காக பணம் டெபிட் செய்யப்படும் போது அதற்கு ஓடிபி கேட்கப்படும். அவ்வாறு கேட்கப்படும்போது நாம் ஓடிபி கொடுக்கவில்லை என்றால் அந்த மாதத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமலே இருக்கும். இந்த சிக்கலை தீர்க்க தான் இந்திய ரிசர்வ் வங்கி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.15,000 வரையிலான Auto Payment-க்கு ஓடிபி தேவையில்லை
அதாவது, ஆட்டோ பேமெண்ட் முறையில் ரூ.15,000 வரையிலான ஆட்டோ டெபிட் பாரிவர்த்தனைகளுக்கு இனி ஓடிபி தேவை இல்லை என்று ஆர்பிஐ கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது பண பரிவர்தனைகளை விரைவானதாகவும், தோல்விகள் இல்லாமல் மேற்கொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஊழியர் நோட்டீஸ் பீரியடை கழிக்கவில்லை என்றால் குற்றமா?.. சட்டம் கூறுவது என்ன?
இந்த அம்சம் எப்படி செயல்படும்?
உதாரணமாக நீங்கள் எதேனும் ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு ரூ.15,000-க்கு குறைவான மாத தவணை செலுத்துகிறீர்கள் என்றால் அந்த தொகை பிடித்தம் செய்யப்பட நீங்கள் எந்த விதமான ஓடிபியையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.