ஏப்ரல் 1 முதல் இந்த வங்கிகளின் ஏடிஎம் விதிகளில் மாற்றம் – கூடுதல் கட்டணம் செலுத்த நேரலாம்!
New ATM Charges Rule: இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1, 2026 அன்று முதல் வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளன. இந்த புதிய விதிகள், பணம் எடுக்கும் வரம்பு, இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்
இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1, 2026 அன்று முதல் வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளன. இந்த புதிய விதிகள், பணம் எடுக்கும் வரம்பு, இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க முடியும். இந்த பட்டியலில் 3 வங்கிகள் ஏடிஎம் விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அது எந்தெந்த வங்கிகள், ஏடிஎம் விதிகளில் என்ன மாற்றம் என்பது குறித்து பார்க்கலாம்.
எச்டிஃப்சி வங்கியின் புதிய விதிகள்
எச்டிஎஃப்சி வங்கியின் அறிவிப்பின்படி, யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுப்பதும் இப்போது இலவச பரிவர்த்தனைகளில் சேர்க்கப்படும். முன்பு இது தனியாக கருதப்பட்டது, தற்போது மொத்த இலவச பரிவர்த்தனைகளில் கணக்கிடப்படும். இதனால், இலவச வரம்பை மீறினால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 மற்றும் வரி கட்டணம் வசூலிக்கப்படும்.
இதையும் படிக்க : 24 மணி நேரத்தில் டெலிவரி.. புதிய சேவையை அறிமுகம் செய்த இந்திய தபால் துறை!




மேலும் எச்டிஎஃப்சி வங்கியில் மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம். பிற வங்கிகளில் மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு 3 முறையும், பிற பகுதிகளில் மாதத்திற்கு 5 முறையும் கட்டணமின்றி ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில டெபிட் கார்டுகளுக்கு, தினசரி பணம் எடுக்கும் வரம்பை குறைத்துள்ளது. உதாரணமாக சில கார்டுகளுக்கு முன்பு ரூ.1,00,000 வரை பணம் எடுக்க முடிந்த நிலையில் தற்போது ரூ.50,000 அல்லது ரூ. 75,000 வரை மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் RuPay NCMC Platinum Domestic, RuPay Women Power Platinum மற்றும் International Debit Cards போன்ற பல கார்டுகளுக்கு பொருந்தும்.
ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க்கின் புதிய யுபிஐ வசதி
ஜியோ பேமெண்ட் பேங்க்கில் ஏடிஎம் இல்லாமல் கியூஆர் கோட் ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, யுபிஐ செயலிகளை பயன்படுத்து நேரடியாக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். இதனால் நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் டெபிட் கார்டுகளை எடுத்து செல்ல வேண்டியதில்லை. மேலும் நம் டெபிட் கார்டுகளின் ரகசிய எண்கள் பாதுகாக்கப்படும்.
இதையும் படிக்க : பெண்களுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இந்த பதிய விதிகளின் காரணமாக ஏடிஎம் பயன்பாட்டை கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இலவச பரிவர்த்தனைகளை மீறாமல் இருக்க வேண்டும். இல்லயெனில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இனி யுபிஐ ஏடிஎம் பயன்பாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த புதிய மாற்றங்கள் தினசரி பயன்பாட்டை பாதிக்ககலாம் மற்றும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தலாம். எனவே ஏப்ரல் 1, 2026 அன்று ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைகளையும் கருத்தில் கொள்வது அவசியம்.