Credit Card : கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா?.. இந்த தவறை செய்யாதீர்கள்.. வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!
Credit Card Mistake | தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலான மக்களுக்கு அது குறித்து தெரிவதில்லை. இந்த நிலையில், கிரெடிட் கார்டில் செய்ய கூடாத தவறு குறித்து பார்க்கலாம்.
                                தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள கிரெடிட் கார்டுகளை (Credit Cards) பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருந்தாலும், அதில் செய்யும் ஒரு சில தவறுகளின் மூலம் வருமான வரித்துறை (Income Tax Department) உங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது. எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது என்ன தவறு செய்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும், அதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு
பணவீக்கம் உள்ளிட்டவை காரணமாக விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தாங்கள் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் தங்களது கூடுதல் பண தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கிக்கொண்டு அதனை பொறுமையாக மாத தவணை மூலம் திருப்பி செலுத்த அனுமதி வழங்கப்படும் நிலையில், பலரும் இதனை சிறந்த தேர்வாக கருதுகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க : Fixed Deposit : 1 – 3 ஆண்டுகளுக்கான FD முதலீடு.. 7.77% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!




இந்த தவறை செய்தால் வருமான வரி நோட்டீஸ் அனுப்பும்
கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். காரணம் நீங்கள் செய்யும் சிறிய தவறு கூட உங்களை பெரிய பிர்சனையில் தள்ளிவிடும். குறிப்பாக நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஒரே முறை பொருட்களை வாங்கினால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். பொதுவாக ஒருவர் ரூ.1 லட்சத்திற்கும் மேல் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகள் குறித்து வங்கிகள் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும். அந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை உங்களை கண்காணிக்க தொடங்கும்.
இதையும் படிங்க : GST 2.0 : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?
ஒருவேளை நீங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்கிறீர்கள் என்றால் அது குறித்து வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். அதாவது உங்களுக்கு அந்த பணம் எப்படி வந்தது, அதன் மூலதனம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பும். நீங்கள் அதற்கு உரிய ஆவணங்கள் உடன் விளக்கம் அளிக்க வேண்டும். அதனை நீங்கள் செய்ய தவறும் பட்சத்தில் அதற்காக உங்கள் மீது வருமான வரித்துறை கூடுதல் வரி விதிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.