AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : சரிந்தது தங்கம் விலை.. எவ்வளவு?.. இன்றைய நிலவரம் இதோ!

Gold Price Decreased Silver Price Remain Same | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் உள்ளது.

Gold Price : சரிந்தது தங்கம் விலை.. எவ்வளவு?.. இன்றைய நிலவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Aug 2026 10:42 AM IST

சென்னை, ஆகச்ட் 10 : சென்னையில் (Chennai) நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (ஆகஸ்ட் 10, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

புவிசார் பதற்றம், பங்குச்சந்தை உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஈரான் போர் காரணமாக நிலவிய பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்ததன் காரணமாக தங்கம் சற்று மந்தமாக இருந்தது.

இதையும் படிங்க : லோனுக்கான தவணையை செலுத்த தவறினால் உங்களுக்கு மிரட்டல் வருகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதி

குறிப்பாக ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜுலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து ரூ.13,000-க்கே விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு, சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us