Voter ID : வெறும் 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Get Voter ID in 15 Days | வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான கால அவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. அதன்படி, வெறும் 15 நாட்களில் வாக்காளர் அடையாள அடடை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Voter ID : வெறும் 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Jun 2025 11:57 AM

 IST

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) பெறுவதற்கான கால அவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) குறைத்துள்ளது. அதாவது, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வெறும் 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளது. முன்னதாக வாக்காளர் அடையாள அட்டை பெற ஒரு மாத காலம் வரை நேரம் எடுத்த நிலையில், தற்போது அது வெறும் 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வெறும் 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை பெறும் கால அவகாசத்தை குறைத்த இந்திய தேர்தல் ஆணையம்

இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற தகுதியானவர்களாக உள்ளனர். இந்த வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள். வாக்களிப்பதற்கு மட்டுமன்றி, வாக்காளர் அடையாள அட்டை இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய ஆவணமாகவும் உள்ளது. இந்த வாக்காளர் அடையாள அட்டைடை விண்ணப்பித்து பெறுவதற்கு ஒரு மாத காலம் வரை ஆகும் நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அதனை வெறும் 15 நாட்களாக குறைத்துள்ளது. தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கால அவகாசம் குறைப்பு புதிய வாக்காளர்கள் மிக விரைவில் வாக்காளர் அடையாள அட்டை பெற பயனுள்ளதாக இருக்கும்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. அதற்கு முதலில் Voters Service Portal என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் மொபைல் எண், இ மெயில் முகவரி, கேப்ட்சா ஆகியவற்றை பதிப்விட்டு உள்ளே நுழைய வேண்டும்.
  3. அதற்கு அடுத்து வரும் பக்கத்தில் விண்ணப்பதாரரின் முதல் பெயர், கடைசி பெயர், பாஸ்வேர்டு, Confirm Password ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.
  4. பிறகு Request OPT -ஐ கிளிக் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ பதிவிட வேண்டும்.
  5. இப்போது மேலே கொடுத்த தகவல்களை மீண்டும் கொடுத்து லாக் இன் செய்ய வேண்டும்.
  6. பிறகு Preview என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
  7. பிறகு Submit செய்யுங்கள்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் வெறும் 15 நாட்களில் உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..