Fixed Deposit : நிலையான வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தி கடன் பெறுவதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள்!
Get Quick Loans Against Your Fixed Deposits | நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி கடன். இந்த முறையை பயன்படுத்தி கடன் வாங்கும் நிலையில் பல சிறப்பு அம்சங்களை பெறலாம்.

சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள திட்டம் தான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டம். இந்த திட்டம் நிதி பாதுகாப்பை வழங்குவது மட்டுமன்றி, நிதி இழப்பு அபாயத்தையும் குறைக்கிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்காக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். சிலர் வீடு வாங்குவது, தொழில் தொடங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். என்னவாயினும் எதிர்கால தேவைகளுக்காக முதலீடு செய்பவர்களுக்கு இது சிறந்த திட்டமாக உள்ளது.
சிறப்பு பலன்களை வழங்கும் நிலையான வைப்பு நிதி திட்டம்
சேமிப்பு எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க மிகவும் உதவியாக இருக்கும். இந்த நிலையில் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கிறது. அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களுக்கு நிதி தேவைப்படும் ஏற்படும் பட்சத்தில் தங்களது நிலையான வைப்பு நிதி முதலீட்டின் மூலமே கடன் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் மிக சுலபமாகவும், விரைவாகவும் கடன் பெற முடியும்.
நிலையான வைப்பு நிதி திட்டத்தின் மூலம் கடன் பெறுவது எப்படி?
நிலையான வைப்பு நிதி திட்டத்தில் கடன் பெற அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்துள்ள தொகையில் 90 சதவீதம் வரை கடன் பெறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வட்டியும் மிக குறைவாகவே இருக்கும். அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டத்தை மையப்படுத்தி கடன் பெறும் போது திட்டத்திற்கு எத்தனை சதவீதம் வட்டி வழங்கப்படுகிறோ அதனை விட 1 அல்லது 2 சதவீதம் கூடுதலாக வட்டி வழங்கப்படும்.
நிலையான வைப்பு நிதி கடன் – சிறப்பு அம்சங்கள்
நிலையான வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தி கடன் பெறு நபர்கள் அதனை 60 மாதங்களுக்குள்ளாக அதனை திருப்பி செலுத்த வேண்டும். இவ்வாறு நிலையான வைப்பு நிதி திட்டத்தின் மூலம் கடன் பெறும் வகையில் கடனுக்கு குறைந்த வட்டி வழங்கப்படுவது மட்டுமன்றி, மாத தவணை விகிதங்களும் குறைவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.